பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதின்மூன்றாம் சாஸனம்

115

காணப்படுகின்றன. இப்படிப்பட்டவர்களுக்குக் கொடுமையும் சாவும் அன்பரிட மிருந்து பிரிதலும் நேரிட் டிருக்கின்றன. சிலர் தப்பித்துக்கொண்டபோதிலும், தமது நண்பரோ, அயலாரோ, உற்றாரோ, உறவினரோ கொடிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர் ; இவ்விதமும் மனிதருக்குக் கஷ்டம் நேர்ந்திருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் நேர்ந்துள்ள கஷ்டங்களுக்காக தேவர் பிரியன் மிகுந்த வருத்தத்தை அடைகின்றான். ஏனென்றால் ஏதாவது ஒரு மதத்தில் நம்பிக்கையில்லாத மனிதரே யில்லை.

கலிங்கத்தில் அப்போது ஜனங்களுக்கு நேர்ந்த சாவு, கொடுமை, சிறைப்பாடு முதலிய கஷ்டங்களில் நூறில் ஒரு பங்கு அல்லது ஆயிரத்தி லொருபங்கு கஷ்டம் இப்போது நேருமாகில் தேவர் பிரியன் மிகுந்த வியாகுலத்தையடைவான். தேவர் பிரியன், தனக்குச் செய்த தீங்கையும் கூடுமளவும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். தேவர் பிரியன், ராஜ்யத்துக் குட்பட்டு வசித்துவரும் காட்டு ஜாதியாரை அன்புடன் நடத்திக் கடாக்ஷிக்கின்றான். ஏனெனின், அப்படிச் செய்யாவிடின் மற்றொரு சமயம் அவன் அதற்காகப் பச்சாத்தாபப்படும்படி நேரலாம். நான் அவருக்குச் சொல்வதென்ன? தீய வழிகளைத் தவிருங்கள், வருந்தாதேயுங்கள் என்பதே. சகல ஜீவராசிகளுக்கும் அடக்கம், அமைதி, சமாதானம்,