116
சாஸனங்கள்
சந்தோஷம் முதலியன கிடைக்கவேண்டுமென்பது தேவர் பிரியன் விருப்பமாம்.
தர்மம் மூலமாகவுள்ள வெற்றியே முக்கியமானவெற்றியென்பது தேவர்பிரியன் கொள்கை. இவ்வித ஜயம் தேவர் பிரியன் இங்கேயும்(தனது ராஜ்யத்திலும்), எல்லா இடத்தும், எல்லைப் புறமுள்ள ராஜ்யங்களிலும், அறுநூறு யோஜனைக் கப்பாலுள்ள அரசன் அந்தியோக்கன் நாட்டிலும், அந்தியோக்கனுக்கு அப்பாலுள்ள துலமாயன்1, அந்தேகினன், மகன், அலகஸுதரன் என்ற பெயருடைய நால்வர் (4) ராஜ்யங்களிலும், தெற்கு, சோழர், பாண்டியர், தாம்பிரபர்ணி முதலிய பல நாடுகளிலும், இங்கே அரசனது ஏகாதிபத்தியத்து மாகாணங்களிலுள்ள யவனர்2, காம்போஜர், நர்பக தேசத்து நாபபந்தியர், போஜர், பிதேனிகர், ஆந்திரர், புலிந்தர் முதலிய ஜனங்களிடையிலும் எங்கும், தேவர் பிரியனின் தர்மபோதனையைச் செவியுற்று மனிதர் அதைப் பின்பற்றி வருகிறார்கள். தேவர் பிரியனுடைய தூதர் பிரவேசியாத எல்லைப் பிரதேசங்களிலும் மனிதர் தர்மத்தின் போதனையைக்கேட்டு அதைப் பின்பற்றி நல்வழியை அடைகின்றனர்; இப்படியே இன்னுமடைந்து வரவும் செய்வர்.
இப்படிக் கிடைத்துள்ள எங்கும் பரந்த வெற்றி எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்