பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலிங்க சாஸனம் : க

121


1. புதிதாக அடக்கிய ஜனங்களிடம் நடப்பதைப்
பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை,

தேவர் பிரியன் சொற்படி தொஸாலி நகரத்தின் வியோஹாலகரான (நியாயாதிபதிகளான) மகாமாத்திரர் இங்ஙனம் கூறப்படுகின்றனர். எனது நோக்கம் எதுவாயினும் நீங்கள் அதை மனமார ஒப்புக்கொண்டு அதன்படி உடனே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என் விருப்பம். உங்களுக்கு அனுப்பப்படும் கட்டளைகளே அதற்கு முக்கியமான வழி. நீங்கள் பல்ஆயிரம் ஜனங்களைப் பரிபாலித்து நல்ல மனிதருடைய அன்பையும் சம்பாதிக்கக் கடவீர். எல்லா மனிதரும் எனது மக்கள்; என் குழந்தை குட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித நன்மைகளும் சுகமும் உண்டாகவேண்டு மென்று பிரார்த்திப்பதுபோலவே எல்லா மனிதருக்கும் நான் (அனுக்கிரகங்களை) விரும்புகிறேன். நீங்கள் இதன் கருத்தை முற்றிலும் உணரவில்லை. சிலர் ஒருவேளை இதைக் கவனித் திருக்கலாம் ; ஆயினும் இதன் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளவில்லை. உங்களால் இஃது உணரத்தக்கது ; இந்த நீதி மிக அழகாக அமைந்திருக்கிறது.

சில மனிதர் அகாரணமான் சிறைக்கு அல்லது வேறு துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவ்விதம் காரணமின்றிய சிறைப்பாடால் மற்ற