பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சாஸனங்கள்

செய்யச் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் தமக்கு எப்பொழுதும் சொந்தமாகவுள்ள அலுவல்களை கைவிடாது, அரசன் கட்டளைப் படி இவ்வேலையையும் செய்து வரவேண்டும்.

31 வாக்கியங்கள், இங்கு அதிகமாக தன்மையும் படர்க்கையும் முன்னிலையும் மாறி மாறி வந்து கருத்தை மறைக்கின்றன.

1. இந்த நீதி மிக அழகாக அமைந்திருக்கிறது. 'எல்லோரும் எனது மக்கள், நான் என் குடிகளை என் குழந்தைகளைப் போலவே கருதுகிறேன்' என்ற நீதி.

2. பரிக்லேசம். குற்றவாளியைச் சோதனை செய்வதற்காக ஏற்படும் தண்டனைகள் என்ற கருத்தில் இச்சொல் அர்த்த சாஸ்திரத்தில் வருகின்றது. இங்கு 'துன்பம்' என்று பொதுவாக மொழிபெயர்த்திருக்கிறோம்.

3 வியோஹாலகர். வியவகாரங்கள் அல்லது வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரிகள்.

கடைசிப் பாராவிலுள்ள வாக்கியங்கள் பிரத்தியேகமான ஒரு சாஸனம் போல் தோற்றுகின்றன. அவற்றின் உத்தேசம் அனுஸம்யானம் எங்கும் நடைபெற வேண்டுமென்பது. இச்சொல்லின் கருத்தைப்பற்றி அவதாரிகையில் குறிப்பிட்டிருக்கிறோம்.