பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலிங்க சாஸனம் : ௨

127

யெனினும் இதைப் படிக்கவேண்டும். இவ்விதம் பிரவிர்த்தித்து எனது கட்டளையை நிறை வேற்றுங்கள்.

20 வாக்கியங்கள். தவுளிப் பிரதியில் முதல் வாக்கியம் தொஸாலியிலுள்ள ராஜகுமாரனைக் குறிப்பிடுகின்றது. இச்சாஸனத்திலும் தன்மையும் முன்னிலையும் படர்க்கையும் வாக்கியங்களில் மாறிமாறி வருகின்றமையால் பலவிடங்களில் பொருள் தெளிவாயில்லை.

1. சாதுர்மாஸியம் என்பது நான்கு மாதங்கள் கொண்ட ஒரு பருவகாலம். முற்காலங்களில் ஒரு வருஷம், குளிர், வேனில், மழை என மூன்று பருவகாலங்கள் அடங்கியதாகக் கருதப்பட்டு வந்தன. தை, வைகாசி, புரட்டாசி மாதங்களின் ஆரம்ப நாட்களே சாதுர்மாஸிய புண்ணிய காலங்கள். வருஷங்களின் கணக்கு சாந்திரமானமாயிருந்ததனால் மாதங்கள் அமாவாசையின் பின்னுள்ள பிரதமையிலிருந்து கணக்கிடப்பட்டன. ஒரு அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசைவரையிலும் ஒரு மாதமாயிற்று. ஐந்தாம் ஸ்தம்ப சாஸனத்திலும் அசோகன் காலத்கில் சாதாரணமாய் எந்நாட்கள் புண்ணிய நாட்களென்று மதிக்கப்பட்டனவென்பதும் எவை நோன்பு நாட்களென்பதும் விளக்கப்பட்டிருக்கின்றன.