பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


V. ஸ்தம்ப சாஸனங்கள்

ஸ்தம்ப சாஸனங்கள் என்பவை ஏழு பிரத்தியேகமான லிகிதங்கள். இவை அசோகனின் இருபத்தேழாவதும் இருபத்தெட்டாவதும் பட்டாபிஷேகவருஷங்களில் பிரசுரமானவை. ஸார்நாத் சாஸனம் ஒன்றைத் தவிர இச்சாஸனங்களே கடைசியாகப் பிரசுரஞ்செய்யப்பட்டவை. முன் அரசன் பிரசுரஞ்செய்த பல கட்டளைகளை உறுதி செய்ய இவை பிரசுரஞ்செய்யப்பட்டன போலும். தனது அரசாட்சியின் தன்மை எதுவென்பதும், அரசன் எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாக நடந்து வருகிறானென்பதும், எல்லோருக்கும் அடக்கமுடைமை அவசியமென்பதும், ரஜூகரின் வேலையும், பிராணி இம்ஸை நிரவாணச் சட்டங்களும், ஸமரஸபாவத்தின் அவசியமும், முதல் ஆறு சாஸனங்களின் விஷயங்களாம். ஏழாவது சாஸனம் அசோகன் செய்த தான சீர்திருத்தங்களின் மதிப்புரையெனலாம். அரசன் கடைசியாக தனது ஜனங்களிடம் விடைபெற்றுக் கொள்வதுபோலத் தோன்று கின்றது இச்சாஸனம்.

முதல் ஆறு ஸ்தம்பசாஸனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இச் சாஸனங்கள் எழுதப்பட்டுள்ள ஸ்தம்பங்களாவன :—

1. டில்லி தோப்ரா ஸ்தம்பம். இது முன்காலங்களில் ஸிவாலிக் மலைச்சாரலில் தோப்ரா என்ற ஊரில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பிரோஸ்ஷா (கி. பி. 1351-1388) என்ற துக்லக் அரசன் மிகுந்த பிரயாசையுடன் இதை டில்லிக்குக் கொண்டுபோய் அங்கே நாட்டினான். இந்த ஸதம்பத்திலுள்ள பிரதி ஏறக்குறைய நல்ல ஸ்திதியிலிருக்கிறது.

2. டில்லி மீரத் ஸ்தம்பம். இதுவும் ௸ பிரோஸ்ஷா மீரத்திலிருந்து டில்லிக்கு மாற்றியது, லிகிதங்கள் சிதைவுபட்டிருக்கின்றன.