பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் ஸ்தம்ப சாஸனம்

133

4. ரஜூகரின் வேலை

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நான் முடிசூடி இருபத்தாறு ஆண்டுகளானபின் இத்தர்மலிகிதத்தை வரையச் செய்தேன். பல நூறாயிரம் ஜனத் தொகையையுடைய ஜனபதத்தை (நாட்டை) ஆளுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் எனது ரஜூகரை நான் தண்டனைக்கும் வெகுமதிக்கும் அதிபதிகளாகச் செய்திருக்கிறேன். எதற்காகவென்றால், ரஜூகர் தம் வேலையைத் தைரியமாயும், சமாதானமாயும் நடத்தித் தமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு நன்மையையும் சுகத்தையும் உபதேசஞ்செய்து அவர்களை அனுக்கிரகிப்பதற்காகவேயாம். அவர்கள் சுகத்தினுடையவும் துக்கத்தினுடையவும் தன்மையை உணர்ந்து நாட்டிலுள்ள குடி ஜனங்களுக்குத் தர்மீயமான நியாய விசாரணையை அவர் செய்யவேண்டும். ஏனெனில், இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் சம்பாதித்துக் கொள்வதற்கே. ரஜூகர் என்னுடைய நன்மதிப்பை அடைய எண்ணி என்னைச் சேவிக்கின்றனர். பிரஜைகளுக்கு நியாயம் நடத்தி அதன் மூலமாகவும் ரஜூகர் என் பிரியத்தைச் சம்பாதிக்கக் கடவர். ஒருவன் தன் குழந்தையை நல்ல செவிலித் தாயிடம் ஒப்பித்தவுடன் ‘இவள் என் குழந்தையை நன்றாகப்