பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சாஸனங்கள்

பாதுகாத்து வருகிறாள்' என்று சமாதானமடைவதுபோல ரஜூகர் அவர்களுக்குட்பட்ட நாட்டின் நன்மையையும் சுகத்தையும் பாதுகாத்து வருகின்றன ரென்று நான் சமாதான மடைகிறேன். அவர் அச்சமில்லாமலும், அமைதியுடனும் வித்தியாசமில்லாமலும் தமது கடமையை நடத்திவர வேண்டும். இதற்காகவே நான் ரஜூகரை, தண்டனைக்கும் வெகுமதிக்கும் அதிபதிகளாகச் செய்திருக்கிறேன். நியாயவிசாரணை செய்வதிலும்[1] தண்டனை விதிப்பதிலும் சமத்துவம் விரும்பத்தக்கதன்றோ ? அதனால் தற்காலம் முதல் இச்சட்டம் செய்யப்பட்டிருக்கிறது. மரண தண்டனை தீர்ப்பாய் சாவை எதிர்பார்த்துச் சிறையிலிருக்கும் குற்றவாளிகளுக்கு, என்னால் மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்நாட்களில் அவருடைய உறவினர் சிறையிலுள்ளோரின் விடுதலைக்காக மறுவிசாரணை ஏற்பாடு செய்யவோ (அல்லது) அவருக்கு மன்னிப்புக் கிடைப்பதற்கும், அவர்களுடைய 'மறுமையின் நன்மைக்காகவும் தாங்களே தானங்களைச் செய்து பட்டினிவிரதங்கள் அனுஷ்டிக்கவோ செய்யலாம். என் விருப்ப மென்னவெனின், சிறைவாஸத்தின் பொழுதும் இம் மனிதர் சீர்திருந்தி மறுமையின் பயனை அடைய வேண்டுமென்பதும், தர்மத்தை அனுசரித்

  1. 1. வியோஹால.. நியாய விசாரணைசெய்தல்.