பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் ஸ்தம்ப சாஸனம்

141

எனக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. முற்காலங்களில் அரசர்கள் தர்மத்தின் அபிவிர்த்தியோடு மனிதருடைய அபிவிர்த்தியும் இசைந்து செய்வது எவ்விதம் கைகூடுமென்று விரும்பினார்கள்? மனிதனோ தர்மத்தின் அபிவிர்த்திக்குச் சரியாய் வளரவில்லை. எவ்விதம் மனிதர் என் நோக்கத்தை அனுசரிப்பர் ? தர்மத்தில் மனிதருடைய அபிவிர்த்தியானது நான் நினைக்கும் வண்ணம் திருப்திகரமாய் இருக்கும்படி. செய்வதெப்படி? தர்மத்தின் வளர்ச்சியினால் நான் சிலரையாவது நல்வழிக்குக் கொண்டுவரலாமன்றோ .

III. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். இப்படி என்னால் நிச்சயிக்கப்பட்டது. 'தர்மத்தின் கொள்கைகளை நான் பரவச்செய்வேன் ; ஜனங்களுக்குத் தர்மத்தைப்பற்றிய ஞானத்தைப் புகட்டுவேன். இதைக் கேட்போர் நல்வழிப்பட்டுத் தாமும் அபிவிர்த்தியடைந்து தர்மத்தையும் வளரச் செய்வார்களன்றோ .' இதற்காகவே தர்மத்தின் கொள்கைகள் உபதேசிக்கப்படுகின்றன. என் காரியதரிசிகள் (புலிஸர்) என் பிரஜைகளைக் கவனித்து அவர்களுக்கு என் போதனையைப்பற்றி விரிவாக உரைப்பார்கள். பல நூறாயிரம் ஜனத்தொகையுடைய ஜனபதங்களின் தலைவராகிய ரஜூகரும் இவ்விஷயத்தில் என் 'கட்டளையைப் பெற்றிருக்கின்றனர். அவர் என் கட்டளை இன்னவையென்று என்னிடத்தில் விசுவாஸமுள்ள என் பிரஜைகளுக்குச் சொல்ல வேண்டும்.