பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சாஸனங்கள்

Iv. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி இப்படிச் சொல்லுகிறான். இதே உத்தேசத்துடன் தர்ம ஸ்தம்பங்களை நான் நாட்டியிருக்கிறேன் ; தர்ம மகாமாத்திரரை நியமித்திருக்கிறேன் ; தர்மத்தின் சாரத்தை நான் போதித்து வருகிறேன்.

v. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். மிருகங்களுக்கும் மனிதருக்கும் நிழல் கொடுக்கப் பாதைகளில் ஆலமரங்களை நான் நட்டு வளர்த்திருக்கிறேன். மாந்தோப்புக்களை உண்டுபண்ணியிருக்கிறேன். அரைக் கோசத்துக்கு ஒருதடவை கிணறுகள் வெட்டிச் சாவடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களுக்கும் மனிதருக்கும் சுகத்தைக் கொடுக்கும்பொருட்டு நான் பற்பல தண்ணீர்ப் பந்தர் களை வைத்திருக்கிறேன். ஆனால் சுகானுபவம் என்பது அல்ப விஷயம். என் பிரஜைகளுக்கு நான் செய்திருப்பதுபோலவே பண்டை அரசர்களும் மனிதருக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய உத்தேசம் உலக மானது தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்பதே.

VI. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி இப்படிச் சொல்லுகிறான். என் தர்ம மகா மாத்திரரிடம் பல நற்காரியங்களை நான் ஒப்பித்திருக்கிறேன். கிருகஸ்தர்களுக்கும் துறவிகளுக்கும் பற்பல மதஸ்தர்களுக்கும் வேண்டிய உபகாரங்களை அவர் செய்து வருகின்றனர். மேலும் (பௌத்த) சங்கத்தின் காரியங்களையும்