பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாஸனங்கள்

144

ராஜன் இப்படிச் சொல்லுகிறான். என்னால் என்னென்ன நற்காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் என் பிரஜைகளும் பின்பற்றியிருக்கிறார்கள். இனிமேலும் பின்பற்றி நடப்பார்கள். தாய்தந்தையருக்குச் சுச்ரூஷை வயோதிகரிடத்தும் உபாத்தியாயர்களிடத்தும் பணிவு, பிராமணர் சமணர்களுக்கு ஈகை, ஏழை அனாதை முதலிய தாழ்ந்தோரை இரக்கத்துடன் நடத்தல், அடிமை வேலைக்காரர்களிடம் பக்ஷம் முதலிய குணங்கள் ஜனங்களிடத்தில் வளர்ந்திருக்கின்றன ; இக்குணங்கள் இன்னும் அதிகமாய் விர்த்தியடையும்.

IX. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். இங்கு சொல்லப்படும் தர்மத்தின் அபிவிர்த்தி ஜனங்களிடத்தில் அதிகமாகக் காணும்போது அதற்கு இரண்டுவித காரணங்கள் சொல்லலாம். முதலாவது தர்மீயமான சட்டங்கள். இரண்டாவது கண்ணோட்டம்3. இவ்விரண்டில் தர்மீயமான சட்டங்கள் அவ்வளவு பிரயோஜன முள்ளனவல்ல, கண்ணோட்டமே. மேன்மையானது; ஆனபோதிலும், நான் பலதர்மீயமான சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இன்னின்ன பிராணிகளை வதை செய்யக்கூடாதென்றும் வேறு பற்பல தர்ம நியமங்களும் என்னால் பிரசுரஞ்செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தர்மத்தில் பிரியம் ஜனங்களிடம் வளர்ந்து காணப்படுவதும், ஜீவ ஜந்துக்களின் வதை கிரமமாக நின்றுவருவதும், பலியிடுதல் குறைந்திருப்பதும் என் கண்ணோட்டத்தின் பயனின்றி