பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சாஸனங்கள்


VIII. ராணி காருவாகியின் லிகிதம்

இது பிரயாகை ஸ்தம்பத்தில் ஆறு ஸ்தம்பசாஸனங்களில் நகலின் பின் எழுதப்பட்டிருக்கிறது. லிகிதத்தின் ஸ்தானத்திலிருந்து இது இருபத்தேழாம் பட்டாபிஷேக வருஷத்திற்குப் பின் எழுதப்பட்டிருக்கவேண்டுமென்று நாம் அனுமானிக்கலாம். அசோகன் குடும்ப சமாசாரங்களைப்பற்றிப் பல விரிந்த கதைகள் ஐதிஹ்யங்களில் இருக்கின்றபோதிலும் சாஸனங்களில் அதிகமாக ஒன்றும் கூறப்படவில்லை. ஏழாம் ஸ்தம்ப சாஸனத்தில் அரசனுடைய பிள்ளைகளும் ராஜகுமாரர்களும் ராணியின் குமாரர்களும் வெவ்வேறாகக் கூறப்பட்டிருக்கின்றனர். பக்கம் 143. அசோகனும் பல பூர்விக அரசரைப்போல பல மனைவிகளை உடையவனாயிருந்தான். வட ஐதிஹ்யங்களில் அரசனுக்கு அஸந்தமித்திரை யென்றும் அவள் இறந்தபின் திஷ்யரக்ஷிதை யென்றும் பெயருடைய இரு. மனைவிமார் இருந்தனரென்று சொல்லப்படுகிறது. திஷ்யரக்ஷிதையின் தீய சுபாவத்தைப் பற்றிக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த லிகிதத்திலுள்ள இரண்டாவது ராணி காருவாகியின் பெயரோ அல்லது அவள் மகன் தீவரனின் பெயரோ ஐதிஹ்யங்களில் வரவில்லை.

தேவர் பிரியன் ஆக்ஞைப்படி எல்லா இடங்களிலுமுள்ள மகாமாத்திரருக்கு இவ்வாறு தெரியப்படுத்துகிறோம். இரண்டாவது ராணியால் செய்யப்பட்ட எல்லா நன்கொடைகளையும், மாந்தோட்டம், உத்தியானவனம், சத்திரம், அல்லது வேறு எவ்விஷயமாயினும் சரி அவற்றை, அத்தேவியினது தானமென்று கணிப்பது அவசியம். தீவரன் தாயும் இரண்டாவது ராணியுமாகிய காருவாகி செய்யும் காரியங்கள் இவை.