பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சாஸனங்கள்

II கலதிக மலையிலுள்ள விசுவஜோப்ரி குகை, III கலதிக மலையிலுள்ள ஸுபியா குகை.

I. இந்த நியக்ரோத குகை ஆஜீவகர்க்கென்று ராஜனான பியதஸியால் தான் முடிசூடிப் பன்னிரண்டு வருடங்களானபின் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

II. கலதிக மலையிலுள்ள இந்தக் குகை ஆஜீவகர்களுக்கென்று ராஜனான பியதஸியால் தான் முடிசூடிப் பன்னிரண்டு வருடங்களான பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

II. ராஜனான பியதஸி முடிசூடிப் பத்தொன்பது வருடங்களானபின் ஸுபியா குகையை (ஆஜீவகருக்கு) சந்திர சூரியருள்ள வரையிலும் நிலை நிற்கும்படித் தானஞ் செய்திருக்கிறான்.