பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் 1

கால அட்டவணை


கி. மு. ' அசோகன்
ஆண்டு. பட்டாபிஷேக விவரங்கள்.
 . வருஷம்.

277 ... மாஸிடோணியா அரசன் அன்டிகோ
 னஸ் ஆட்சி தொடங்கிற்று.
273 ... அசோகன் இளவரசன் ஆனான்
272 ... எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தரின்
  ஆட்சி தொடங்கிற்று.
269 1 அசோகனுடைய பட்டாபிஷேகம்.
261 9 அசோகன் கலிங்கம் சென்று யுத்தம்
  ஆரம்பித்தான். அவன் பௌத்த
  மதத்தை ஆச்ரயித்து உபாஸகன்
  ஆனான். விரியாவில் இரண்டாம்
  ஆன்டியோக்கஸ் ஆட்சி தொடங்
  கிற்று.
259 11 அசோகன் வேட்டையாடுதலைத் தவிர்
  த்தான். தர்மப் பிரயாணங்கள் ஆரம்ப
  மாயின. தர்மத்தைப் போதிக்கத்
  தூதர் தூரதேசங்களுக்குப் போயி
  னர்.
258 12 கைரீனே தேசத்து மகன், (மகாஸ்)
  எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தர்
  ஆகிய இருவரும் இறந்தனர்.
257 13 முதலாம் உபசாஸனம்
  பிரசுரஞ் செய்யப்பட்டன.
  3-வது சாஸனம்.
  4-வது சாஸனம்.
அனுஸம்யானம் ஐந்து வருஷங்களுக்
 கொருமுறை அவசியம் என்ற சட்.
 டம் உண்டாயிற்று,
பராபரில் ஆஜீவகருக்கு இரண்டு குகை
 கள் செய்யப்பட்டன.
256 14 பதினான்கு சாஸனங்களும் மொத்தத்
 தில் பிரசுரஞ் செய்யப்பட்டன.
தர்மமகாமாத்திரரின் நியமனம்.
முதலாவது கலிங்க சாஸனம் எழுதப்
 பட்டது.