பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/171

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


II

பௌத்தமறை நூல்கள்

அசோக சாஸனங்களிலும் இப் புஸ்தகத்தின் அவதாரிகையிலும் கூறப்பெற்ற பௌத்த நூல்களைப் பற்றிச் சுருங்க விளக்குவது இவ்வனுபந்தத்தின் நோக்கமாகும். பௌத்த சமயத்தைச் சேர்ந்த நூல்கள் எண்ணிறந்தன என்று கூறுவது மிகையல்ல. பௌத்தமதமானது கால அளவில் செழித்தோங்கிப் பல கப்பும் கவறுகளுமுடைய அரும்பெரும் விருக்ஷமாக வளர, அதன் சமய நூல்களும் அவ்விதமே பலவாறாகவும் பற்பல பாஷைகளிலும் தோன்றின. ஸம்ஸ்கிருத மொழியில் பல பௌத்த நூல்கள் உண்டு. திபெத், சீனா, இலங்கை முதலிய தேச பாஷைகளிலும் பல உள. அவற்றில் சில நூல்கள் பகவத்கீதை, கடோபனிஷத்து முதலிய நூல்களைப்போல உலகத்தின் மதிப்புக்கும் சாசுவதமான புகழுக்கும் உரியவை, ஆனால் நாம் இங்குக் கூறப்போவது அந்நூல்களைப்பற்றி அல்ல ; பௌத்த சமயத்தின் மூல நூல்கள் என்று கணிக்கக் கூடியவை த்ரிபிடக என்று சொல்லப்படுகிற கிரந்தங்களாம். இங்கு அவற்றில் அடங்கினவும் ‘பௌத்தர்கள் திருமறை’ என்று சொல்லத்தகுந்தனவுமான நூல்களை விவரிப்போம்.

கௌதம புத்தரும் அவருடைய சீஷர்களும் தங்களுடைய மதவிஷயமான சம்பாஷணைகளுக்கு அவ்வப்போது வட இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிகளையே உபயோகித்தனர். அதனால் ஆதி பௌத்த நூல்களின் பாஷை பிராகிருதமொழியாயிருந்தது. இப்பாஷை தற்காலம் பாலி என்று கூறப்படுகிறது. இலங்கை, பர்மா முதலிய தென் நாடுகளில் பாலி புண்ணியபாஷை எனக் கருதப்பட்டு அந்நாட்டுப் பண்டிதர்களால் போற்றப்பட்டு வருகிறது. மூன்று பிடகங்களில் அடங்கிய கிரந்தங்களுக்கு