பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/172

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160

அசோகனுடைய சாஸனங்கள்

உரையாகவும் வியாக்கியானங்களாகவும் வேறு பல நூல்கள் பாலியில் எழுதப்பட்டிருக்கின்றன.

பிடகம் என்ற சொல் கூடை என்னும் பொருளுடையது, த்ரிபிடக என்றால் மூன்று முக்கியமான பௌத்தப் பிரபந்தத் திரட்டுகளாம். இது பாலியில் எழுதப்பட்டுள்ளது. இஃது அச்சில் இந்நூலின் பக்கங்களைப்போல பதினாயிரம் பக்கங்களுக்கு மேற்படும்; ‘பைபிள்' என்ற கிறிஸ்துவர்களுடைய சத்தியவேதப் புத்தகத்தை விட மும்மடங்கு விரிவானது. இதில் அடங்கிய கிரந் தங்கள் இருபத்தொன்பது என்று சொல்லலாம். இந்த இருபத்தொன்பதில் பல கிரந்தங்கள் சிறு உரைகளின் தொகுதியேயாம்.

மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனலாம். அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் (ஸம்ஸ்கிருதம்: ஸ்தவிர வாதம்) அல்லது பெரியோரின் மதம் என்று கருதப்படுபவை. கௌதம புத்தர் நிர்வாணத்தை அடைந்த சிறிது காலத்திற்குள்ளேயே பௌத்த ஸங்கத்தின் கொள்கையில் வேறுபாடுகள் பல உண்டாயின. சிலர் தேரவாதக் கக்ஷிக்கு எதிராக நின்றனர். அசோகசக்கரவர்த்தியின் காலம்வரையும், பௌத்தர்களுக்கிடையில் எந்தச் சமய நூல்கள் தமது மறைக்குப் புறம் என்றும், எவை உட்பட்டவை என்றும் தீர்மானம் பெறா மல் வாதங்கள் நடந்து வந்தன. மூன்றாவது பௌத்த மகாஸபையில் இவ்விஷயம் ஒருவாறு முடிவு செய்யப்பட்டது. சமய நூல்கள் திரட்டப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன. இவ்விவரங்களை - அவதாரிகையில் 37-ம் பக்கத்தில் கூறியுள்ளோம்.

அனேக பௌத்தர்கள் அம் மகாஸபையில் தேர்ந்-