பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அசோகனுடைய சாஸனங்கள்

இவற்றை, விசேஷமாக இரண்டாவது பிடகத்திலடங்கிய நூல்களை, கிறிஸ்தவர்களின் சத்தியவேதத்தில் அடங்கிய புஸ்தகங்களுக்கு ஒப்பிடுவது சற்று பொருந்தும். பைபிளின் ‘ புது ஏற்பாடு' என்ற பகுதியில் கிறிஸ்து முனிவரின் வரலாறும் அவர் உபதேசங்களும் இருக்கின்றன. இவை யாவும் - கிறிஸ்து முனிவர் காலஞ்சென்ற பிறகு அவருடைய சீஷர்கள் தம் ஞாபகத்திலிருந்து திரட்டியவையே. அதுபோலவே சாக்கிய முனிவருடைய உபதேச மொழிகளும் பிற்காலத்தில் திரட்டப்பட்டவையே. பௌத்தரின் மறை நூல்களைப் போலவே கிறிஸ்தவரின் மறைநூல்களும் ஒரே மதசித்தாந்தத்தை வற்புறுத்துவது. இரண்டு மதங்களும் ஒரு மகா புருஷனை கடவுளாகக் கொள்கின்றது. ஆயினும், பௌத்த மறை நூல்களில் கௌதம சாக்கியமுனிவரைவிட அவர் போதித்த தர்மமே முனைத்திருக்கிறது; கிறிஸ்தவ மறைநூல்களிலோ கிறிஸ்துவே முனைத்திருக்கிறார். உதாரணமாக, புது ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் சரிதை நான்கு ஞானிகளால் உரைக்கப்படுகிறது. பிடகங்களில் ஓரிடத்திலும் சாக்கிய முனிவருடைய சரிதை தொடர்ச்சியாக உரைக்கப்படவில்லை. ஆனால் பல இடங்களில் அவருக்குப் பூர்ண ஞானோதயம் உண்டாவதற்கு முன்னும் பின்னுமுள்ள பல செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து நாம் கௌதம புத்தருடைய ஜீவ சரித்திரத்தை உணர்ந்துகொள்ளலாமாயினும் புத்தருடைய வரலாற்றை உரைப்பதை விட அவருடைய தர்மோபதேசங்களை விளக்குவதே பிடகங்களின் உத்தேசம்.

தர்மத்தின் கொள்கைகளை விளக்கும் உரைகளுக்கு ஸுத்த அல்லது சூத்திரங்கள் என்று பெயர். இந்த சூத்திரங்களின் நடையைப்பற்றிப் பொதுவாக ஒரு அபிப்-