பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

165

புத்தர் உலகத்தாருக்கு முதலிற் செய்த பிரசங்கமும் இப் பாகத்தில் சேர்க்கப்பட் டிருக்கிறது, தர்ம சக்கரப் பிரவர்த்தன சூத்திரம் (மஹாவர்கம் 6-ம், அத்.) என்னும் நூலில் இந்த முதல் உபதேசம் செய்யப்பட்ட வரலாறும் அதன் கருத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. புத்தருடைய தர்மத்தை நன்கு உணர அவரது முதல் உபதேசமாகிய ‘தர்ம சக்கரப் பிரவர்த்தன சூத்திரம்’ மிகவும் ஏற்ற ஆதாரமாம். அசோகனும் இவ்விதமே கூறுகிறான் போலும். அவன் தனது பாப்ரு சாஸனத்தில் எல்லோரும் அவசியம் மனனம் செய்யவேண்டிய ஏழு சூத்திரங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றில் முதலாவதாகக் கூறப்படுவது ‘வினய ஸமுத்கர்ஷம்’ என்பது. இது, தர்மசக்கரப் பிரவர்த்தன சூத்திரத்தின் மறுபெயரேயென்று சில வித்வான்கள் சொல்லுகின்றனர். இது, திரும்பவும் இரண்டு முறை ஸுத்தபிடகத்தில் வெவ்வேறு தொகுதிகளில் வருகின்றது.

2. ஸுத்த பிடகம்

ஸுத்த பிடகம் அல்லது சூத்திர பிடகம், தர்மத்தை விளக்குவதற்கான சம்பாஷணைகளும் வாதங்களும் பிரசங்கங்களும் அடங்கியதாகும். இதுவே பௌத்த மறைத் தொகுதியில் மிகவும் முக்கியமான பாகம். இதில் ‘ஐந்து நிகாயங்கள்' என்ற பிரிவுகள் உண்டு. இவ்வைந்து நிகாயங்களாவன. :--

1. தீர்க நிகாய ... 34 நீண்ட சூத்திரங்கள்.
II. மஜ்ஜிம நிகாய ... 152 நடுத்தரமான சூத்திரங்கள்.
TII. ஸம்யுத்த நிகாய ... 55 “ஸம்யுத்தங்கள் கொண்டது.
IV. அங்குத்தர நிகாய .. 11 பிரிவுகளாகத் தொகுக்கப் பட்ட சூத்திரங்கள்.