பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

167

பிரம்மம், ஆன்மா, ஈசுவரன் முதலிய கொள்கைகளை ஆராய்ச்சி செய்யும் பிரஹ்ம ஜால சூத்திரம் ; இல்வாழ்பவரின் கடமைகளைக் கூறுவது ஸ்ருகால வாத சூத்திரம் ; துறவறத்தின் பெருமையை விளக்குவன ஸமண்ண பல சூத்திரமும், பப்பஜ்ஜ சூத்திரமும் ; நான்கு பாவனைகளைக் கூறும் தெவிஜ்ஜ சூத்திரம்.

ii. மஜ்ஜிம அல்லது மத்தியம் நிகாயம் தீர்க நிகாயத்தில் உட்பட்ட சூத்திரங்களை விடக் குறுகிய சூத்திரங்களின் தொகுதியாம். சில உரைகள் ஸுத்தாந்தம் என்றும் வாதம் என்றும் பெயருடையனவாயிருக்கின்றன. அசோகனுடைய உள்ளம் திடீரென மாறினதற்குக் காரணத்தை ரட்டபால சூத்திரம் என்பது விளக்குகிறது என்று சொல்லலாம். அயல் நாடுகளைக் கைப்பற்ற வேண்டுமென்ற அரசருக்குரிய பேராசை மற்றப் பேராசைகளைப் போலவே இழிவு என்று இங்கு விளக்கப்படுகிறது.

iii. விஷயத்தின் ஒற்றுமைபற்றித் தொகுக்கப்பட்டது ஸம்யுக்த நிகாயம் என்பது, ஒரே விஷயத்தைப் பற்றிய பல உரைகளுக்கு அல்லது ஒரே ஒருவனுக்காகச் செய்யப்பட்ட பல உபதேசங்களுக்கு ஸம்யுக்தம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் இந்த நிகாயத்தில் ஐம்பத்தைந்து ஸம்யுத்தங்கள் உண்டு, உதாரணமாக, இந்த நிகாயத்தில் நான்காவது ஸம்யுத்தத் திற்கு மாரஸம்யுத்தம் என்று பெயர். அஃதாவது, மாரனைப் பற்றிக் கூறும் சூத்திரங்கள். இவ்விதமே ஐந்தாவது பிக்குணி ஸம்யுத்தம் ; பிக்குணிகளை அஃதாவது பெண் - துறவியரைப்பற்றிக் கூறுவது.

iv. அங்குத்தர நிகாயம் த்ரிபிடகத்துள் மிகவும் விரிந்த பாகம், இதில் 2308 சூத்திரங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த நிகாயம் பதினொரு அத்தியாயங்களாகப் பிரிக்கப்-