பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியாவின் பூர்வ சரித்திர ஆராய்ச்சி

9

பிறகு புராதனவஸ்து சாஸ்திரிகளும் மற்றுள்ள வான்களும் பல துறைகளில் ஆராய்ச்சிவேலையை தொடங்கினார்கள். ஐரோப்பியருள் ஸ்ரீ. கன்னிங்ஹாம் (Cunningham) பர்ஜெஸ், (Bargess) பூலர் (Bihler) ஸெனார்ட், (Senart) பொர்னாப் (Burnouf) என்போரும், நம்மவருள் ஸ்ரீ. ராமகிருஷ்ண பந்தர்க்கர், பகவன்லால் இந்திராஜீ, ராஜேந்திரலால் மித்திரர், என்ற வித்வான்களும் அசோக சாஸனங்களின் கருத்தை விளக்குவதற்குப் பிரயாசப்பட்டார்கள். பழைய லிபிகள் எல்லாம் வாசிக்கப்பட்டன ; புராதன வஸ்துக்கள் சோதனை செய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டன; லிகிதங்கள் சரியான நகல்களுடனும் மொழிபெயர்ப்புகளுடனும் வியாக்கியானங்களுடனும் பிரசுரஞ் செய்யப்பட்டன ; ஹிந்து, ஜெயின பௌத்த மதங்களைச்சார்ந்த கிரந்தங்கள் விவேசன புத்தியுடன் படிக்கப்பட்டமையால் அவற்றிலிருந்து பூர்விக சரித்திரத்துக்குப் பல ஆதாரங்கள் ஏற்பட்டன ; அசோகன் என்ற பெயருடைய அரசன் ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் ஆண்டு வந்தவனென்றும் அவனுக்குப் பியதஸி என்ற விருது இருந்ததென்றும் பௌத்தக் கிரந்தங்களிலிருந்து தெரியவந்தது. பௌத்தர்களது தெய்வ பாஷையாகிய பாலிக்கும் அசோக சாஸனங்களின் பாஷைக்குமுள்ள நெருங்கிய சம்பந்தம் வெளியாயிற்று. லிகிதங்களில் கூறப்பட்டிருக்கும் பியதஸி, தேவானாம் பிரியன், தேவானாம்பிரியனான பியதஸி, எல்லாம் ஒரே மனிதனைக் குறிக்கின்றன வென்றும், பெயரில் என்ன மாறுபா டிருந்தபோதிலும் இந்த லிகிதங்கள் வாசகரீதியில் ஒரே மனிதனின் வாக்கியங்களென்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய ஒற்றுமையையுடையன வென்றும்,