பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

169

தனவும் பிற்காலத்தில் தோன்றியனவுமாகிய நூல்களும் இத்தொகுதியில் இருக்கின்றன. இதில் அடங்கிய பதினைந்து நூல்களையும் ஒன்றுபோல விவரிக்கவேண்டியது அவசியமில்லை. முக்கியமானவற்றைக் கீழே குறிப்பிடுவோம்.

B. தம்மபத. இந்நூல் ஐரோப்பாவிலுள்ள பல பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள 423 நீதிவாக்கியங்கள் திருவள்ளுவர் செய்த குறட்பாக்களைப்போலவும் பர்த்ருஹரியின் நீதிசுலோகங்களைப் போலவும் மிக இனிமையாகவும் அழகாகவும் திகழ்கின்றன.

E. ஸூத்த நிபாத. இதில் 71 சிறு சூத்திரங்கள் இருக்கின்றன. இதில் அடங்கிய சூத்திரங்கள் மிகப் புராதனமானவை யென்று அறிஞர்களால் கருதப்படுகிறது, அசோகனுடைய பாப்ரு சாஸனத்தில் சொல்லப்படும் “ உபதிஷ்யன் கேள்விகள்" என்ற உரை இந்நூல் 54-வ தாகிய சாரிபுத்திர சூத்திரம் என்று கருதப்படுகிறது. மோனேய ஸூத்திரமும் இந்நூலில் உள்ளதே. அது 12-வது உரை. ராஹுல சூத்திரம் என்ற பெயருடைய உரை ஒன்றும் இந்நூலில் காணப்படுகிறது (23-வது சூத்). இது பாப்ரு சாஸனத்தில் குறிப்பிடப்படும் உப தேசமே என்று நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. மஜ்ஜிம நிகாயத்திலும் ராஹுல வாதம் என்ற ஒரு சூத்திரம் இருக்கிறது.

H & I. தேரகாதை, தேரிகாதை. பாப்ரு சாஸனத்தில் முனிகாதா அல்லது முனிகளின் கீதங்கள் என்று கூறப்பட்ட உரை தேரகாதை என்று நமக்குத் தோன்றுகிறது. பௌத்த மதத்தின் அறிவு வளரவளர தேரகாதை, தேரிகாதை என்ற நூல்கள் அதிகமாகப் புகழ்பெறும். ஏனென்-