பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அசோகனுடைய சாஸனங்கள்

றால், இந்நூல்களில் அடங்கிய பாடல்களில் எல்லோருடைய இதயத்தையும் உருக்கக்கூடிய மனோபாவங்கள் காணப்படுகின்றன. தேரகாதை என்பது தமது வாழ் நாட்களிலேயே விடுதலைப் பதவியை அடைந்த மஹான்களுடைய கீதங்களாம். தேரிகாதை என்பது முன்கூறிய உயர் நிலையை அடைந்த ஸ்திரீகளால் இசைக்கப்பட்ட பாடல்கள். இவ்விரு புஸ்தகங்களிலுள்ள கீதங்களில் துறவறத்தில் திருப்தியும், மகிழ்ச்சியும், சாந்தமும், அமைதியும், சுற்றத்தாரிடம் அன்பும் அனுதாபமும், உயிர்ப் பிராணிகளிடம் ஈவும், இரக்கமும், இயற்கை வனப்பில் ஈடுபடும் பரிசுத்த மனமும் மிக மேன்மையாக விளங்குகின்றன.

J. ஜாதக. இக்கதைகளைப்பற்றி அவதாரிகையில் 62-ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம், புத்தர் போதி விருக்ஷத்தின் அடியில் பூர்ண ஞானத்தை அடைந்ததும் அவருக்குப் பூர்வ ஜன்மங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் யரவும் அகக்கண்ணில் விளங்கினவாம். அவருடைய . தர்மோபதேசங்களில் அவர் - தம்மையே திருஷ்டாந்தமாகக் கூறுவது வழக்கம், தாம் முன்னொரு காலம் புலியாயிருந்ததாகவும், யானையாயிருந்ததாகவும், ஓர் ஏழை விறகுவெட்டியாயிருந்ததாகவும் கூறி, ஓர் ரசமான கதையைச் சொல்லி அவர் தாம் வற்புறுத்த எண்ணங்கொண்ட நீதியை விளக்குவார். இம்முறை அவருடைய தர்ம போதனைக்கு ஏற்றதாயிருந்தது. பிற்காலங்களில் புத்தர் தமது பூர்வ ஜன்ம நிகழ்ச்சிகள் என்று கூறிய கதைகள் திரட்டப்பட்டன. ஜாதக என்ற நூல் இக்கதைகளே, இங்கு 449 ஜாதகக்கதைகள் அடங்கியிருக்கின்றன. "சிங்கத்தின் தோலைப் போர்த்துத் திரிந்த கழுதை" போன்ற கதைகள் பல ஜாதகங்களில் உண்டு. இக் கதைகளின்