பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்

171

உரையில் பல வித்தியாசங்களையும் நாம் காணலாம்.

குத்தக நிகாயத்தில் அடங்கிய மற்ற நூல்களைப்பற்றி அந்நூல்களின் பெயருக்கு எதிராகவே சிறு குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளவும்.

3. அபிதர்மபிடகம்

ஸூத்த பிடகத்தில் பிரதிபாதிக்கப்படும் தர்மங்களும் தத்துவங்களும் இன்னும் விரிவாக இங்குக் கூறப்படுகின்றனவேயன்றி புது விஷயங்கள் கிடையா. பெரும்பாலும் இப் பிடகத்தில் அடங்கிய நூல்கள் பிற்காலங்களில் எழுதப்பட்டனவும் ஒரு சாராரின் தத்துவ ஞானத்தை மாத்திரம் விளக்குவனவுமான கிரந்தங்களாம். இவற்றை இங்கு விவரித்துக் கூறுவது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை.

1. தர்மஸங்கானி ஜீவிதத்தின் நிலைமைகளைப்பற்றி.
2. விபங்க சம்பாஷணைகள்.
3. கதாவஸ்துப் பிரகரண 1000 தவறான கொள்கைகளுக்கு மறுப்புரை.
4. புத்கல ப்ரக்ஞத்தி ஆன்மாவைப் பற்றிய அறிவு.
5. தாது கதா மானிட குணங்களின் விவரம்.
6. யமக பத்து இரட்டைகள்.
7. ப்ரஸ் தானப் பிரகரண காரிய காரணங்களின் விளக்கம்.

கதாவஸ்து என்ற நூல் இயற்றப்பட்ட அவசரத்தைப்பற்றி முன்னே 37-ம் பக்கத்தில் கூறியுள்ளோம். வினய பிடகத்தில் அடங்கிய மூன்று கிரந்தங்களும் ஸுத்த பிடகத்தில் அடங்கிய முதல் நான்கு நிகாயங்