பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

9

மான ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஏற்படவில்லையென்று நாம் சொல்லலாம். சந்திரகுப்தனின் வரலாற்றை விரித்துரைப்பது நம் விஷயத்துக்குப் புறமாயினும் கௌடல்யனால் எழுதப்பட்ட ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலைப் பற்றி இவ் வவதாரிகையின் மற்றொரு பாகத்தில் கூறுவது அவசியம். இந்த நூல் இக்காலத்துக்கு முன்னும் பின்னுமுள்ள துரைத்தனத்தின் அமைப்பையும் ராஜீய நோக்கங்களையும் நன்றாக விளக்குகிறது.

ஜெயின நூல்களில் சந்திரகுப்தன் இருபத்தையாண்டு (கி,மு.325-301) அரசு நடத்திய பிறகு உலகவாழ்க்கையில் வெறுப்படைந்து பத்திரபாகு என்ற ஜெபின முனிவருன் சீடனான தாகவும் அம் முனிவருடன் தக்கணம் சென்று பன்னிரியாண்டு தவம்புரிந்து கடைசியில் பட்டினி விரதமூலமாகத் தமது உடலைக் களைந்ததாகவும் கூறப்படுகின்றன. மைசூர் சம்ஸ்தானத்தில் சந்திரகிரி என்ற இடத்தில் இவ் வைதிஹ்யங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன.

மௌரிய வம்சத்து இரண்டாவது அரசனான பிந்துசாரன் 
பிந்துசாரன்

அசோகனுடைய தந்தையாதலால் இவனைப்பற்றிப் பௌத்தக் கிரந்தங்களில் சில ருசிகரமான கதைகள் காணப்படுகின்றன. இவற்றில் உண்மையைத் தேடி அறிவது கஷ்டமாயிருக்கிறது. இவன் காலத்தில் ஆட்சி முறையில் விசேஷ மாறுதல்கள் ஏற்படவில்லையாயினும் ராஜ்ய காரியங்கள் ஒழுங்காக நடந்தேறினவென்றும், தக்ஷிணம் மௌரியரின் ஏகாதிபத்தியத்தில் ஐக்கிய மடைந்தது இக்காலத்திலென்றும் கூறுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சந்திரகுபதன் காலத்தில் இந்தியாவுக்கும் ஸிரியா முதலிய குண திசை நாடுகளுக்கும் நே