பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அசோகனுடைய சாஸனங்கள்

உறவு ஏற்பட்டது; இவ்வுறவு பிந்துஸாரன் காலத்திலும் நீடித்து வந்தது. பிந்துஸாரன் யவனருடைய விஞ்ஞான சாஸ்திரங்களை வியந்து, இவற்றின் சூக்ஷுமத்தைத் தெரிந்துகொள்ள, ஸிரியா தேசத்து அரசனிடம் தேர்ந்த வித்துவான்களைத் தனக்கு அனுப்பிக் கொடுக்கவேண்டுமென்று கேட்டதாக ஒரு க்ரீக் வரலாறு இருக்கின்றது. இவன் இருபத்தேழு வருஷங்கள் அரசுபுரிந்து பின் மரணமடைந்தான் (காலம், கி, மு. 301-273)

அசோகனுடைய ஜீவிய சரிதைக்கு அவனது சாஸனங்களையும் 
அசோகனைப்
பற்றி ஐதிஹ்யங்
களிலிருந்து கிடை
க்கும் விவரங்கள்.

புராதன ஆராய்ச்சியால் தெரியவந்திருக்கும் சில செய்திகளையும் நாம் முக்கிய ஆதாரமாய் வைத்துக் கொள்ளலாம். அசோகனைப்பற்றிய ஐதிஹ்யங்கள் இரண்டு சார்பிலிருந்து வந்திருக்கின்றன. (i) திவ்யாவதானம் என்ற ஸம்ஸ்கிருதக் கிரந்தத்திலுள்ள வட இந்திய ஐதிஹ்யம். (ii) சிலோன் தீவிலுள்ள பௌத்தரின் இதிகாஸ கிரந்தங்களாகிய தீபவம்சம், மஹாவம்சம் என்பனவற்றிலிருந்து கிடைக்கும் சிலோன் ஐதிஹ்யம். இந்த இரு சார்பு ஐதிஹ்யங்களிலிருந்து அசோகனைப்பற்றித் தெரியவரும் செய்திகள் எல்லாம் நாம் ஒப்புக்கொள்ளக் கூடியவனவா யிருக்கவில்லை. ஆனால் அவை முற்றிலும் தள்ளத்தக்கவையுமல்ல. இந்துக்களுடைய புராணங்களில் பூர்வசரித்திர விஷயமான பல செய்திகள் அடங்கியிருப்பினும் அங்கு அசோகனுடைய அரசாட்சியைப்பற்றி ஒரு விவரமுமில்லை. பண்டைய அரசரின் பெயர்களுக்கிடையில் அசோகனுடைய பெயரும் இருப்பது ஒரு மேன்மையாமோ? பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற ராஜதரங்கிணி என்ற