பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

காச்மீர சரித்திரத்தில் அசோகனுடைய சில வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. காச்மீர நாட்டின் பல கோயில்களும் அரண்களும் அசோகனால் ஆக்கப்பட்டவை யென்று குறிப்பிடப்படுகின்றது. எவ்விதமும், நமக்கு பௌத்த ஐதிஹ்யங்களை விட உறுதியான சரித்திரசாதனங்களில்லையென நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். சாஸனங்களில் குறிப்பிடாமலும் பௌத்த ஐதிஹ்யங்களிலிருந்து மட்டும் தெரிய வருவதுமான செய்திகளுக்குப் பின் புராதன வஸ்து ஆராய்ச்சியிலிருந்து அத்தாட்சி அகப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் பின் கூறுவோம்*[1]. ஆயினும் சாஸனங்களில் சொல்லப்பட்டிருப்பதற்கு விரோதமாயிருக்கிற விவரங்களையும் வினோதக் கற்பனைகளென்று வெளிப்படையாய்த் தெரிகின்ற செய்திகளையும் நாம் உண்மைச் சரித்திரமாய் ஒப்புக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை இங்கு விரித்துக் கூறுவது அனாவசியமென்று நமக்குத் தோன்றுகிறது.

அசோகனின் இளமைப் பருவத்தைப்பற்றிய விவரங்கள் யாவும் ஐதிஹ்யங்களில் மட்டுமே உள்ளன, அசோகன் பிந்துஸாரனின் மூத்தமகனல்ல. பட்டத்துக்கு அதிக பாத்தியதையுடைய பல சகோதரர் அவனுக்கிருந்தனர். ஆயினும் அவனது புத்தி நுட்பமும் சாமர்த்தியமும் பற்றி அவனுக்கு முக்கியமான அரசாங்க அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. அவன் முதலில் தக்ஷசிலா என்ற மாகாணத்தின் அதிபனாய்ச் சிலகாலம் வேலை செய்தபின் உஜ்ஜெயினியின் அதிபனாக நியமிக்கப்பட்டான். பிந்துஸாரன் தீேகவியோகமானவுடன் அசோகன் பாடலிபுரத்தை அடைந்து உபராஜன் என்ற பட்-

  1. கீழ் 20- ம் பக்கம் பார்க்க ,