பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அசோகன் உடைய சாஸனங்கள்

டத்துடன் ராஜ்யத்தின் தலைமையை வகிக்க ஆரம்பித்தான், நான்கு வருஷங்களுக்குப்பின் அசோகன் பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.

இச் செய்திகளை நாம் நம்பலாம்; ஆனால் அசோகன் சிங்காதனத்தைக் கைப்பற்றுவதற்குத் தொண்ணூற்றொன்பது சகோதரரை அவர் மனைவி மக்களுடன் கொலை செய்தானென்றும் ஜனங்களைப் பல விதத்தில் கசக்கிப் பிழிந்தானென்றும் கூறுகின்ற கதைகள் உண்மையென்று தோன்றவில்லை. இவ் விஷயங்கள் அசோகனுடைய குணத்தைப்பற்றிச் சாஸனங்களைப் படிப்பதிலிருந்து நமக்கு ஏற்படும் அபிப்பிராயத்துக்கு முற்றிலும் முரண்படுகிறது. மேலும், பெருந் துஷ்டனான ஒருவன் திடீரென்று வெகு புண்ணியவானாய் விடுவது இயற்கையல்ல. பக்தியின் அனுகுணத்தால் மனிதனின் உள்ளம் சீரடையுமென்பது உண்மையே. அசோகனும் புத்தருடைய சுவிசேஷத்தை'ச் செவியுற்றதினால் பல பழைய தீய வழக்கங்களையும் சுபாவங்களையும் தவிர்த்துத் தர்மாத்மாவாய் மாறியிருக்கலாம்.

ஆனால் அசோகன் முதலில் மிகக் கெட்டவனாகவும் கொடுங்கோல் அரசனாகவும் இருந்தான் என்பதும் பின் திடீரென்று பெரிய முனிசிரேஷ்டனானான் என்பதும் இயற்கையல்ல. சரித்திர சம்பவங்கள் ஐதிஹ்யங்களில் கூறப்படும் பொழுது அவை இவ்விதம் திரிந்துபோகின்றன, ஒரே ஒரு அரசன், மிக மூர்க்கனாகவும் கெட்டவனாகவும் இருந்தவன், தர்மத்தைச் சிரவணம் செய்த மாத்திரத்தில் ஸன்மார்கத்தின் உருவே போன்ற பரிசுத்த மனிதனாய் விட்டானென்ற செய்தி தர்மத்தின் மேன்மையையும் குணத்தையும் எடுத்துக்காட்ட, எவ்வளவு நேர்த்தி-