பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

15

செய்தன. பெரியதோஷம் செய்தோமே யென்று அவனுக்கு ஏக்கம் பிடித்தது. சுயமாகவே அசோகன் இரக்கமுள்ளவன் ; அதோடுகூட இதே சமயத்தில் அரசன் பௌத்த தர்மத்தைக் கேட்கவும் நேர்ந்தது. அவன் தான் படும் பச்சாத்தாபத்தைப் பதின்மூன்றாம் சாஸனத்தில் கண்ணுங் கண்ணீருமாய் எழுதிவைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய லாபத்துக்காயினும் இனிமேல் ஒரு போதும் யுத்தம் செய்வதில்லையென்று அசோகன் பிரதிக்ஞை செய்தான். அப்பிரதிக்ஞை காப்பாற்றப்பட்டது அவனது நிஷ்கபடமான சுபாவத்தை விளக்குகிறது.

எப்படியாயினும் கலிங்கதேசம் ஜயிக்கப்பட்டது; நடந்துபோன காரியம் அவனால் மாற்றக்கூடியதா யிருக்கவில்லை. புதிதாக ஜயிக்கப்பட்ட ஜனங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அருகாமையிலுள்ள காட்டு ஜாதியாரைச் சம்ரக்ஷணை செய்வதற்கும் அதிகாரிகளுக்கு விசேஷ எச்சரிக்கை செய்யப்பட்டது. கலிங்க தேசத்து அதிகாரிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை இன்னதென்று கலிங்க சாஸனங்கள் என்ற லிகிதங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அசோகன் முடிசூடிய ஒன்பதாமாண்டு முதல் அவனுக்குப் 
பௌத்த மதத்
தின் ஸ்பர்சம்

பௌத்த தர்மத்தில் பக்திச்ரத்தை அதிகரித்துக்கொண்டே வந்தது. இம் மாறுதலுக்குக் கலிங்க யுத்தத்தின் கொடுமை மட்டுமல்ல காரணமென்று தோன்றுகிறது. உபகுப்தன் என்ற துறவி அரசனுக்குப் புத்தரின் சுவிசேஷத்தை உபதேசித்தாரென்று வட இந்திய ஐதிஹ்யங்கள் சொல்லுகின்றன. சுகந்த வஸ்துக்கள் செய்யும் குப்தன் மகன் உபகுப்த னென்று இவர்பெயர் விரித்துரைக்கப்-