பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அசோகனுடைய சாஸனங்கள்

படுகிறது. இத்துறவி விவேகமும் பரிசுத்தமும் நிறைந்திருந்தாரென்றும் புத்தருக்குப்பின் பௌத்த சங்கத்தின் தலைமை ஸ்தானத்தை வகித்த ஆசாரியருள் ஐந்தாவதாக நின்றாரென்றும், வெகுநாள் அசோகனுக்குக் குருவாகவும் துணைவராகவும் வாழ்ந்து வந்தாரென்றும் சொல்லப்படுகின்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் சஞ்சாரஞ்செய்த யுவன்சுவங் என்ற சீன யாத்திரிகன் இத்துறவியின் ஞாபகச் சின்னங்களாகக் கட்டப் பட்ட விஹாரங்கள் ஹிந்து தேசத்திலும் வட மதுரையிலும் செழித்திருந்தன வென்று கூறுகிறான். சிலோன் ஐதிஹ்யத்தில் இவர் பெயர் மோகலீ புத்திர திஸ்ஸன் என்று கூறப்படுகின்றது.

அசோகன் பௌத்த தர்மத்தில் ஈடுபட்டு முதலில் உபாஸகன் என்ற நிலைமையைக் கைக்கொண்டான். உபாஸகன் என்பது இல்லறத்தில் ஒழுகும் பௌத்தருக்குப் பெயர். இரண்டரை வருஷங்களுக்குப்பின், அதாவது அரசன் முடிசூடிய பன்னிரண்டாம் வருஷத்தில், அவன் காட்டிய ஊக்கம் தனக்கே திருப்திகரமாயிருக்கவில்லை. முன்னிலும் அதிக ஊக்கத்துடன் தர்மத்தைத் தழுவியொழுக வேண்டுமென்று அவன் நிச்சயித்தான். இப்படி ஒரு வருஷமான பின் அரசன் பௌத்த ஸங்கத்தையே அவலம்பித்தான். இது நிகழ்ந்தது அரசனுடைய பதின்மூன்றாம் பட்டாபிஷேக வருஷத்தில், இவ்வருஷமும் இதற்கு முன்னும் பின்னுமுள்ள வருஷங்களும் அசோகனின் - ஜீவிய சரிதையில் மிகவும் முக்கியமானவை. அவனுடைய எல்லாச் சீர்திருத்தங்களும் நன் முயற்சிகளும் இவ்வாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன. அரண்மனைச் சமையல் அறையில் மாமிச வகை தவிர்க்கப்பட்டது ஜீவ இம்ஸையும் பிராணிவதையும் ராஜத்