பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை

17

துரோகமாகக் கருதப்படுமென்று ஜனங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். தனது தர்மத்தின் கொள்கைகளைக் கற்களிலும் ஸ்தம்பங்களிலும் எழுதி அவற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டுமென்று அரசன் நிச்சயித்தான். வேட்டையாடுதல் முதலிய பழைய பொழுது போக்குகள் தவிர்க்கப்பட்டன. அதற்குப் பதிலாக அவன் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செய்யத் தொடங்கினான். ஆங்காங்குள்ள ஞானசிரேஷ்டர்களைத் தரிசிப்பதும், தர்மத்தைப் போதிப்பதும், தர்ம விவாதங்களை நடத்துவதுமே அரசனுடைய பொழுதுபோக்காயிற்று, அரசனுடைய வாழ்நாட்களில் இப்படிப்பட்ட புனித யாத்திரைகள் பல ஏற்பட்டன.

இவற்றில் பிரதானமானது அசோகனின் இருபத்தோராவது 
தீர்த்த
யாத்திரைகள்

பட்டாபிஷேக வருஷத்தில் நடந்த யாத்திரை. பாடலிபுரத்திலிருந்து புத்தரின் சுதேசமாகிய கபிலவஸ்துவுக்குச் செல்லும் பாதையில் இப்போது ஏழு ஸ்தம்பங்கள் காணப்படுகின்றன. இந்த ஸ்தம்பங்களிற் சிலவற்றில் அசோக சாஸனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டில் ஒருவித லிகிதமுமில்லை. இந்த ஸ்தம்பங்கள் முன் சொல்லப்பட்ட தீர்த்தயாத்திரையின் ஞாபகச் சின்னங்களென்று நாம் ஊகிக்கிறோம். ஐதிஹ்யத்தின் படி அசோகன் இந்த யாத்திரையில் உபகுப்தனையும் அழைத்துச் சென்றான் போலும், அவர்கள் முதலில் புத்தரின் பிறப்பிடமாகிய லும்பினி கிராமத்தைத் தரிசித்தார்களாம் ; பின்னர், கபிலவஸ்து நகரத்தையும், புத்தர் பூர்ணஞானம் அடைந்த இடமாகிய புத்தகயாவையும், அம்மகான் தமது தர்ம சக்கரத்தைச் சுழற்ற ஆரம்பித்த ஸார்நாதத்தையும், அவர் கடைசியாய் பரி-