பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

20

மேலும், சாஸனங்களில் அரசனுடைய ராணிகளையும் பிள்ளைகளையும்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. துறவியான பின் அரசன் அவர்களுடன் வாழவில்லையென்று நாம் அனுமானஞ்செய்து கொண்டாலும் அவர்களுடைய யோகக்ஷேமங்களை அவன் கவனித்துவந்தானென்பது தெளிவு.[1] அசோகன் கடைசிவரையும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்தானென்று நாம் கூறுவது மிகையன்று. இப்படிப்பட்ட ஊக்கமுடைமை, அரசருக்கு இன்றியமையாததென்று கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திற் கூறப்பட்டிருப்பதால் அசோகன் இவ் விஷயத்தில் தம் முன்னோர்வழியை அனுசரித்து வந்தானன்றி வேறில்லை.

ஸங்கத்திற் சேர்ந்தபின் அரசன் ஊக்கமுடைமை முன்னிலும் 
தர்மப் பிரசா
ரம் செய்தல்

அதிக விசாலமடைந்தது. துரைத்தனக் காரியங்களில் மட்டும் தனது ஊக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் உலகமெங்கும் தர்மப்பிரசாரஞ்செய்யவேண்டுமென்ற அவா. அசோகனைப் பற்றியது. தனது ராஜ்யத்தினுள்ளும் வெளியிலும் தர்மப் பிரசாரம் நடத்தினான் அவனது ஏகாதிபத்தியத்துக்குப்பட்ட யவனர், காம்போஜர், நாபகதேசத்து நாபபந்தியர், போஜர், பிதேனிகர், ஆந்திரர், புலிந்தர், ராஷ்டிரிகர், காந்தாரர் முதலிய ஜனங்களுக்குப் பல தர்ம ஆசிரியர் அனுப்பப்பட்டனர். அந்த ஜனங்கள் அசோகன் போதனையை அன்புடன் கேட்டார்களென்று நாம் ஊகிக்கலாம்.

தர்ம போதனைகள் செய்யப்பட்ட பிரதேசங்களின் பெயரும் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியரின் பெயரும் சிலோன் ஐதிஹ்யத்தில்[2] கூறப்பட்-

  1. ஐந்தாம் சாசனம்.
  2. மகாவம்சம், அத். 12.