பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனின் சரிதை 25

ஸமகாலத்துவத்தை அளித்திருப்பதன்றி வேறு விதத்திலும் 
குணதிசை
உலகம் குடதிசை
உலகத்தைச்
சந்தித்தது

முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓர் விஷயமாகும். பௌத்தமதமானது பின் காலங்களில் கீழ்ஆசியாவில் பிரபலமானதுபோல மேல் ஆசியாவில் பிரபலமாசவில்லை. ஆயினும் இப்பிரதேசங்களிலும் அசோகனுக்குப் பின் சில நூற்றாண்டுகள் பௌத்த சமயத்தின் காற்று வீசியது. பௌத்த ஆலயங்களும் மடங்களும் ஏற்பட்டன. இந்தியாவுக்குப் புறம்பான நாடுகளில் கடுமையான நியமங்களும் தவமுமுடைய பல துறவிகள் சஞ்சாரஞ் செய்வதும் வசித்துவருவதும் சகஜமாயின. இதனால் மேனாடுகளில் இவ்வித துறவிச்சங்கங்கள் ஏற்பட்டு, வாழ்வு துன்பமே, என்ற கொள்கையும், புனர்ஜன்மத்தில் நம்பிக்கையும், புலால் உண்ணாமை யோகாப்பியாசங்கள் முதலிய வழக்கங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. இம்மாறுதல்களுக்கு மூலகாரணம் இப்பாகங்களில் அசோகன் செய்த தர்மப்பிரசாரமே, . கிறிஸ்தவ மதஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்து பாலஸ்தீன் நாட்டில் அவதரித்தபோது அங்கே இந்தியருடைய அத்தியாத்ம சாஸ்திரங்களும் துறவறங்களும் செல்வாக்கடைந்திருந்தன. இதிலிருந்து ஒரு சரித்திர உண்மை விளங்குகிறது. அதாவது, பூகோளப் படத்தில் தூரத்தாலும், பாஷையினாலும், காடு மலை கடல் முதலிய இயற்கையின் தன்மைகளாலும் அதிகமாகப் பிரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையிலும் ஆதிகாலங்களிலிருந்து பண்டமாற்றுதல் மட்டுமன்று, எண்ணங்களின் கொடுத்துவாங்கலும் நடந்தேறினவென்பதே. இப்போது இந்தியாவில் ஐரோப்பிய நாகரிகமும் இந்நாட்டு நாகரிகமும் சந்தித் திருப்பதுபோல எகிப்து, வரியா, பாலஸ்தீன் முதலிய