அசோகனின் சரிதை
29
வேண்டுமென்ற ஆர்வத்திற்கும் தனது கடமைகளில் ஓயாக்கவனத்திற்கும் அறநெறியைத் தழுவும் சிரத்தைக்கும் அசோகனை ரோமராஜ்யத்தின் சக்கரவர்த்தியான மார்க்கஸ் ஒளரெலியஸ் என்ற மகானுடன் ஒப்பிடலாம். ஊன் தவிர்த்தல், கொல்லாமை, ஆடம்பரமற்ற வாழ்க்கை முதலிய நோன்புகளைக் கைக்கொண்டவரும் துறவியாக அரசு நடத்தியவரும் சிலருண்டு. ஆனால் அவர் மற்றப்படி அசோகனுக்கு ஒப்பாகாராதலின் அவரை இங்குக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. அவன் பௌத்த நூல்களில் அருகன் என்ற ஆன்மீய நிலைமையை அடைந்தானென்று சொல்லப்படுகிறது. அசோகன் ஒரு மகா புருஷனென்று நாமும் கூறலாம். அப்படியிருந்தும் அவன் கர்வமடைந்ததாகத் தோன்றவில்லை. அவனுடைய கர்வமின்மைக்கு பாப்ருசாஸனம் சான்றாகும். தான் ராஜாதிராஜனாயிருந்தும் அவ்வூரிலுள்ள பிக்ஷுக்களுக்கு, எழுதியிருக்கும் கடிதத்தில் அடிசன் தனது நமஸ்காரத்தை அவர்களுக்குச் சமர்ப்பித்து எழுதத்தொடங்குகிறான். ஆன்ம பரிசீலனை எவருக்கும் அவசியமென்று வற்புறுத்தும் மூன்றாம் ஸ்தம்பசாஸனமும் இங்கு பிரத்தியேகமாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வித உயர்ந்த சுபாவங்கள் அமைந்தவனாயிருந்தும் அக்காலத்துப் பாமர ஜனங்களுக்கு அசோகனுடைய மேன்மையைவிட, அவனது மடமை தான் நன்றாகப் புலப்பட்டது. நன்மையில் நம்பிக்கையற்ற உலகமானது, அரசன் அறநெறியைப் பரவச்செய்வதில் கொண்ட உற்சாகத்தையும் எல்லோரும் நன்கறிந்த நற்போதனைகளை வற்புறுத்துவதில் காட்டிய ஊக்கத்தையும் அவனுடைய பேதைமைக்குத் திருஷ்டாந்தமாகக் கொண்டது. அவன் தனக்குப் பெருமையெனக் கருதிய தேவானாம்பிரியன் என்ற விருதானது பிற்-