அசோகன் தர்மம்
குத் தெரிந்தது. ஸம்பிரதி என்ற பெயருடைய அசோகனின் மற்றொரு பேரன் ஜயினமதத்தைப் பரிபாலிமாக அந்த மதத்தாருக்கிடையில் பெரும்புகழ் பெற்றானென ஜயினக் கிரந்தங்கள் கூறுகின்றன. அசோகனுடைய ஸந்ததியார் அவனது தர்மசிந்தையையோ திறமையையோ பின்பற்றவில்லை. தன் ஸந்ததியாருக்கென்று சாஸனங்களில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கைகள் கவனிக்கப் படவில்லையென்று நாம் ஊகிக்கலாம். புராணங்களிலுள்ள வம்சாவளியின் படி அசோகனுக்குப்பின் வந்த மௌரிய அரசர், அறுவர். அவர் மகதராஜ்யத்தை கி. மு. 232 முதல் 185-௵ வரையும் ஆண்டு வந்தனர். அப்போது ஏகாதிபத்தியத்தின் பல பாகங்கள் வேறுபட்டு சுதந்திர ராஜ்யங்களாய் மாறின. இதுவன்றி, இவ்வரசரைப் பற்றி நமக்குத் தெரிந்ததும் கொஞ்சமே. அவற்றை இங்கே எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமுமில்லை. கடைசியாக பிருஹத்ரதன் என்ற மோரியனிடமிருந்து புஷ்யமித்திரன் என்ற சுங்க வம்சத்து அரசன் ராஜ்ய லக்ஷ்மியைக் கைப்பற்றிக் கொண்டான். அதற்குப் பின்னும் மௌரியர் பாடலீபுரத்தில் சிற்றரசராய் வாழ்ந்தனர்.
III. அசோகன் தர்மம்
அசோகனால் கூறப்படும் தர்மம் எப்படிப்பட்டது, புத்தரின் மதத்தைப் பிரசாரம் செய்வதில் அவன் எவ்வளவு தூரம் பயனடைந்தான் என்ற விஷயங்களை நாம் தனியாக ஆராய்வது அவசியம். பௌத்த மதத்தின் வளர்ச்சியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஸமய சரித்திரத்தில் அசோகனுடைய ஸ்தானம் மிக முக்கியமானது,
அசோகன் மதங்களுக்கெல்லாம் ஸர்வ சம்மதமான