பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் தர்மம்

37

கடைசிக்காலத்தில் பாடலிபுரத்தில் குக்குடாராமம் என்று 
மூன்றாவது
சங்க சபை

பெயர் வழங்கிய பௌத்த மடத்தில் மோகலீ புத்திரதிஸ்ஸன் என்ற ஆசாரியனின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்தியாவில் எல்லாப் பாகங்களிலிருந்தும் பிக்ஷுக்கள் வரவழைக்கப்பட்டனர். ஸபையின் நடவடிக்கைகள் முற்றுப்பெற ஒன்பது மாதங்கள் சென்றன. ஸபையின் அங்கத்தினர் எல்லோரும் சமம் என்ற விதியின் படி காரியங்கள் தீர்மானிக்கப்பட்டனவாதலால் இத் தீர்மானங்களில் அசோகனுடைய சுய அபிப்பிராயங்கள் காணப்படுகின்றனவென்று நாம் எண்ண இடமில்லை. ஆயினும், அரசனும் பிக்ஷுவானது பற்றி ஸபையின் நடவடிக்கைகளில் அவன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

இந்த ஸபையில் மிக முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டன. தீய ஆசாரங்களும் தப்பான கொள்கைகளும் கண்டனஞ் செய்யப்பட்டன. மதக்கிரந்தங்கள் எவையென்று தீர்மானஞ் செய்யப்பட்டு த்ரிபிடகம் என்று பெயருடைய மூன்று பௌத்தப் பிரபந்தத் தொகுதிகளும் இச்சமயம் வரிசைபடுத்தப்பட்டன. தப்பான கொள்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு கதாவஸ்து என்ற கிரந்தம் ஸபைத் தலைவரால் இயற்றப்பட்டது. திரட்டப்பட்ட கிரந்தங்கள் முற்றிலும் பாராயணஞ் செய்யப்பட்டன. இப்புவியின் பல பாகங்களுக்கும் தர்மத்தைப் போதிக்கப் பிராசாரர்களை அனுப்பவேண்டுமென்று தீர்மானித்து ஸபையோர் அதற்கவசியமான போதகர்களையும் தெரிந்தெடுத்தனர்.

ஸபையின் தீர்மானங்களை உறுதி செய்ய அரசனுடைய செல்வாக்குத் தாங்குதலாய் இருந்ததனால் இம்மூன்றாவது மகாசபை முந்திய சபையைப்போல் சண்டையிலும்