பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அசோகனுடைய சாஸனங்கள்

குழப்பத்திலும் முடியவில்லை. ஸார்நாத் ஸ்தம்பத்திலுள்ள சாஸனம், இந்த ஸபையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவரவே என்பது தெளிவு. ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் பிரயாகை ஸ்தம்பத்திலும் இதே கட்டளை பிரசுரஞ் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த மூன்றாவது மகா ஸபையின் நடவடிக்கைகள்கூட பௌத்தரிடையில் ஸர்வசம்மதமாயிருக்கவில்லைபோலும். ஏனென்றால் இந்த ஸபை கூடிய விஷயமேனும் வட இந்திய ஐதிஹ்யத்தில் கிடையாது. இதிலிருந்து மிகப் பிரபலமான அபிப்பிராய பேதங்கள் பௌத்தருக்குள் இருந்தனவென்று நாம் ஊகிக்கலாம். இது ஹீன யானம் மஹா யானம் என்ற இரு பெரும் மதப்பிரிவுகளின் தொடக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது.

மஹாயானம், ஹீனயானம் என்ற சொற்கள் முறையே பெருங்கப்பல் என்றும் சிறுகப்பல் என்றும் பொருள்படும். மஹாயான மதத்தார் தமது மதத்தை, பிறவிக்கடலைக் கடப்பதற்கு முற்றிலும் நம்பக் கூடிய பெருமரக்கலத்தோடு ஒப்பிட்டு, எதிர்க் கக்ஷியாரின் சமயத்தை, வேகமாய்ச்செல்வதும் ஆனால் அபாயகரமானதுமான சிறு படகோடு ஒப்பிட்டதிலிருந்து இச் சொற்கள் உண்டாயின.

எல்லா மதங்களும், ஜீவன், பிரகிருதி, ஈசுவரன், புனர் 
ஸன்மார்க்க
போதனையே
திபெளத்த மதத்
தின் சாரமெனல்

ஜன்மம், கர்மபந்தம், மோக்ஷம் என்ற விஷயங்களைப்பற்றிப் பிரத்தியேக அபிப்பிராயங்களுடையன. அசோகனுடைய சாஸனங்களில் அவன் இவற்றைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அசோகனுடைய அபிப்பிராயப்படி தர்மம் என்பது இப்படிப்பட்ட மதக்கொள்கைகளன்று, “எல்லோரையும் காப்பாற்றக்-