பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் தர்மம் கூடியது

39

கூடியது எதுவோ அதுவே தர்மம்”, என்ற அச்சொல்லின் உட்கருத்தே தர்மத்தின் லக்ஷணமென்று அசோகன் உணர்ந்தான்.அவன் கொள்கைப்படி புத்தபகவானின் மகிமை என்னவென்றால், எல்லா மனிதருக்கும் உயர் நன்னெறியை வழிபடுதல் அவசியம் என்று வற்புறுத்தியதே. நன்னடக்கையும் நல்லெண்ணங்களுமே கடவுள் வழிபாடு, மற்ற மதங்களுடையவும் ஸாராம்சம் ஸன்மார்க்கபோதனை தானென்று அசோகன் எண்ணினதால் மதச்சண்டைகளின் இழிவையும் அந்தியமதங்களைத் தூஷிப்பதின் கெடுதலையும் அவன் நன்குணர்ந்தான்.

அசோகன் தர்மம் என்ற சொல்லினால் என்ன கருத்தைக் குறிப்பிடுகிறானென்று ஐந்து ஆறு சாஸனங்களில் கூறப்பட்டிருக்கிறது. தாய் தந்தையருக்கு வெகு மதிப்பு, வயோதிகர் ஞானசிரேஷ்டர்களுக்கு மரியாதை, ஏழைகளுக்கும் பிராமணர் சமணர் முதலானோருக்கும் ஈகை, அடிமைகள் சேவகர்களிடம் அன்பு, ஜீவ ஜந்துக்களிடத்தில் இரக்கம், அஹிம்ஸை , அதாவது சகல ஜீவராசிகளிடத்தும் அனுதாபம், புலால் உண்ணாமை, வாய்மை, பிறர் மதங்களைத் தூஷணைசெய்யாமை, சமரஸபாவம், இவைதான் தர்மமென்று அசோகன் வற்புறுத்துகிறான்.

ஆயினும் அசோகனின் மதம் சில விஷயங்களில் 
மூடநம்பிக்கை
களைக்
கண்டித்தல்

பாமர ஜனங்களுடைய கொள்கைகளோடு முரண்பட்டது. “மனிதனின் மனப்போக்கும் இச்சைகளும் பலவிதமாக வேறுபட்டிருக்கின்றன: சில மதஸ்தர் என்சாஸனைகளை முற்றிலும் பின்பற்றலாம், மற்ற வகுப்பார் என்சாஸனைகளின் சில பாகங்களைப் பின்பற்றலாம்.“ என்று ஏழாம் சாஸனத்திலும், “ஸ்திரீஜனங்கள்