பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அசோகனுடைய சாஸனங்கள்

இழிவும் அர்த்தமற்றதும் நிஷ்பிரயோஜனமுமான நானாவித சில்லறைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.” என்று எட்டாம் சாஸனத்திலும் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து மற்றமதங்கள் எவ்வளவு தூரம் ஸன்மார்க்க போதனையை அனுஸரிக்கின்றனவோ அவ்வளவே அவை உண்மையென்றும், ஸ்திரீ ஜனங்கள் வீடுகளில் செய்யும் மந்திர கருமங்கள் இழிவென்றும் அரசன் மதித்ததாக நமக்குத் தெரியவருகிறது. ஆனால் அசோகன் இந்த அபிப்பிராயங்களை அடிக்கடி எடுத்துரைத்து ஜனங்களின் மனத்தைப் புண்படுத்தவில்லை. அதுமட்டுமன்று, அவன் எல்லா மதங்களைச்சேர்ந்த துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் பூஜை மரியாதைகள் செய்தான்.

அசோகனுடைய நோக்கங்கள் நாளடைவில் விரிந்து 
ஜீவ இம்சை
நிவாரணம்

கொண்டே வந்தனவென்பதும் முன் சொல்லிய விவரங்களிலிருந்து நாம் ஊகிக்கலாம். ஜீவவதையைப்பற்றி அரசன் கொண்டிருந்த அபிப்பிராயங்களும் மாறுதல் அடைந்தனவென்று தோன்றுகிறது. அரசனின் ஆளுகையின் தொடக்கத்தில் ஜீவவதை பலியிடுதல் முதலிய வழக்கங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டனபோலும், தான் அமிதமான உற்சாகத்துடன் இவ்விதம் பிரவர்த்தித்ததாகப் பின் உணர்ந்து இருபத்தேழாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் ஜீவ வதையைக் குறைப்பதற்கும் அனாவசியமான ஜந்து இம்ஸையை நிவாரணஞ் செய்வதற்கும் மட்டுமே எத்தனித்தான்.

சாஸனங்களில், மனிதன் சுவர்க்கத்தை அடைய 
சுவர்க்கத்தில்
நம்பிக்கை

வேண்டுமென்றும், எவருக்கும் இம்மை யில் செய்யவேண்டிய கடமையை நம்பிக்கை நிறைவேற்றுவதின் பயன் மறுமையில்