பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அசோகனுடைய சாஸனங்கள்

கண்ணோட்டம் முதலிய மானிடகுணங்களின் வலிக்குட்படாத வெறும் இயந்திரமாயிருப்பது நன்றல்ல வென்று கருதினான். அவனுடைய சுயவாக்கியங்களில் இருந்தே அரசன் நோக்கங்களை நாம் தீர்மானிக்கலாம். ‘தர்மத்தினாலேதான் பரிபாலனம் உண்டு ; தர்மத்தினாலே தான் ஒழுங்குண்டு; தர்மத்தினாலே தான் சௌக்கியமடையலாம்’ (முதல் ஸ்தம்பசாஸனம்). தனது அரசியல் தர்மம் என்ற அடிவாரத்தின்மேல் கட்டப்படவேண்டுமென்று அவன் ஆசைப்பட்டதாக இவ்வாசகம் நமக்கு அறிவிக்கின்றது. ‘எல்லா மனிதரும் எனது மக்கள்; எனது குழந்தைகுட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித சந்தோஷ சௌபாக்கியங்களும் உண்டாகவேண்டுமென்று நான் ஆசைப்படுவது போலவே எல்லா மனிதருக்கும் அனுக்கிரகங்களைக் விரும்புகிறேன்” “ எவருக்கும் என்னைப்பற்றிக் கொஞ்சமும் அச்சம்வேண்டாம் ; நிச்சயமாய் என்னால் அவர்களுக்கு வியசனம் உண்டாகாது. சந்தோஷம் மட்டுமே உண்டாகும். அரசன் எதையும் கூடுமானவரையில் க்ஷமையுடன் பொறுத்துக்கொள்ளும் சுபாவமுடையவன்” (கலிங்க சாஸனம்). இவ்வாக்கியங்களும் அசோகனுடைய ஆட்சியின் தன்மையை விளக்க எற்றதாயிருக்கின்றன. தினமும் ஆகாயத்தை நோக்கி வசித்துவரும் நம் நாட்டு ஜனங்களைப்போல மன்னவன் கோலை முற்றிலும் நம்பி அக்காலத்துக்குடிகளும் வாழ்ந்து வந்தனர். அசோகன் மகிமை என்னவென்றால், அவன் குடிகளின் க்ஷேமத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பை நன்கு உணர்ந்தான் என்பதே.

நினைத்த காரியங்களில் ஜயம் ஒன்றே அரசர் கவனிக்க வேண்டுவது, பொய்மையும் சூதும் பேராசையும்