பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அசோகனுடைய சாஸனங்கள்

கூடிவாழலாம் என்னும் உண்மையும், மதக்கொள்கைகள் பற்றி ஒருவனுடைய நன்னடக்கை போய்விடாதென்ற உண்மையும், பலகாலம்வரையும் ஐரோப்பாவிலுள்ள ஜனங்களால் உணரப்படவில்லை. வாள் முனையைக்காட்டி மனிதரைப் பயமுறுத்தி மதக்கொள்கைகள் பிரசாரம் செய்யப்பட்டிருக்கின்றன. கொள்கை வேறுபாடுகளுக்காகப் பலர் உயிருடன் நெருப்பிலிடப்பட்டு பொசுக்கப்பட்டனர். நாட்டில் ஒரேவிதமான மதக்கொள்கைகளே நடமாடவேண்டுமென்ற ஆசை பல அரசரையும் மத குருமார்களையும் அநியாயச் செய்கைகளுக்கும் அக்கிரமங்களுக்கும் தூண்டுகோலாயிருந்திருக்கிறது. அதனால், இரண்டாரயிரம் வருஷங்களுக்கு முன்னிருந்த ஓர் இந்திய அரசன், ஜனங்கள் மதக்கொள்கைகளுக்காகச் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாதென்றும், நானாவிதமதத்தினர் பாஸ்பர வெகு மதிப்புடனும் அன்புடனும் அடுத்தடுத்து வாழ்ந்து வரலாமென்றும், எல்லாமதங்களிலும் சிரேஷ்டமான தத்துவங்கள் உண்டென்றும் கூறியிருப்பது ஆச்சரியமல்லவா? மதங்கள் விஷயத்தில் அசோகன் காட்டிய சமதிருஷ்டி ராஜதந்திரத்தின் அம்சமென்று நாம் நினைக்க இடமில்லை. இது அசோகனுடைய உயர்ந்த மனோபாவத்தையே குறிப்பிடுகின்றது. அக்காலத்து இந்திய ஜனங்களும் ஸமயச்சண்டைகளைக்கொள்ளாது சமரஸபாவத்தை ஆதரித்தனர் எனலாம். “ஓர் ஜாதியாரின் நாகரிகத்தை மதிப்பதற்கு அவர் விஞ்ஞானசாஸ்திரங்களில் அடைந்திருக்கும் தேர்ச்சியும் நீர் நெருப்பு காற்று முதலிய இயற்கைச் சக்திகளை அடக்கியாளும் திறமையும் அல்ல அளவுகருவிகள், சமஸரபாவத்தின் முதிர்ச்சியே சரியான அளவுகருவி.” என்று ஓர் சரித்திர ஆசிரியர் கூறுகிறார். இவ்வபிப்பிராயம் சரியெனின், இருநூறு