பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

49

வருஷங்களுக்கு முன்கூட ஐரோப்பிய தேசங்களில் ஏற்படாத உயர்ந்த நாகரிகத்தை கி. மு மூன்றாம் நூற்றாண்டிலேயே நம் தேசத்து ஜனங்கள் அடைந்திருந்தனர்.

ராஜ்யத்திற் சுபிக்ஷத்தைப்பெருக்கவும் ஜனங்களின் 
க்ஷேமாபி
விர்த்திக்கான
ஏற்பாடுகள்

க்ஷேமத்தின் பொருட்டும் பல ஏற்பாடுகள் அசோகனாற் செய்யப்பட்டன. அரசன் கூறியுள்ள வாக்கியங்களாலேயே இவற்றை நாம் உரைக்கலாம், “தேவர் பிரியனான பியதஸி ராஜனால் ஆளப்பட்ட எல்லாப் பாகங்களிலும் ........ அதுமட்டுமன்று ...... அயல் அரசர் நாட்டிலும் எல்லா இடங்களிலும் அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான். அஃதாவது, மனிதருக்கு வைத்தியசாலை, மிருகங்களுக்கு வைத்தியசாலை என்பனவே. மேலும், மனிதருக்கு உபயோகமானதும் மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ, அவை கிடைக்கும் இடங்களிலிருந்து கிடைக்கா இடங்களுக்கு கொண்டுவரப்பட்டுப் பயிராக்கப்படுகின்றன, கனி, காய் கிழங்குகளும் வரவழைக்கப்பட்டுப் பயிர் செய்யப் படுகின்றன........... பாதைகளில் கிணறுகள் வெட்டவும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன” (இரண்டாம் சாஸனம்). “நான் மாந்தோப்புக்களை வளர்க்கப்பண்ணியிருக்கிறேன். அரைக்குரோசத்துக்கு ஒரு தடவை கேணிகள் வெட்டிச் சாவடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களுக்கும் மனிதருக்கும் சுகத்தைக் கொடுக்கும் பொருட்டு நான் பல தண்ணீர்ப் பந்தல்களை ஏற்படுத்தியிருக்கிறேன்” (ஏழாம் ஸ்தம்பசாஸனம்). இவ்வித ஏற்பாடுகள் அசோகனுக்கு முன்னிருந்த அரசர்களாலும் செய்யப்பட்டிருக்கலாமாயினும் இவ்விவரம் அசோகன் புகழைக் குறைக்காது .

4