பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அசோகனுடைய சாஸனங்கள்

களுக்கு ஒருமுறையும், தொஸாலி மாகாணத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடந்து வந்ததென்று சொல்லப்படுகிறது. இச்சொல்லுக்கு நாம் கொள்ளும் கருத்து சரியாயின், அசோகன் ஆளுகை முற்றிலும் ஏக சக்கராதிபத்தியமா யிருக்கவில்லையென்றும் ஜனங்களுடைய சம்மதத்துடன் பல காரியங்கள் நடந்தனவென்றும் ஊகிக்கலாம்.

துரைத்தனத்தில் மெகாஸ்தெனிஸ் கூறியிருப்பது போன்ற கமிட்டிகள் அமைந்திருந்தனவென்றும் சாஸனங்கள் அறிவிக்கின்றன. கணனா, பரிஷத், நிகாயா முதலிய நிர்வாக சபைகள் மூன்றாம் சாஸனத்திலும், பன்னிரண்டாம் சாஸனத்திலும், வேறிடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் அமைப்பும் கடமைகளும் என்னவென்று விளங்கவில்லை.

அசோகனுடைய பெருமை அவனுடைய ராஜீய நோக்கங்களிற் பிரதிபலிக்கின்றது, அவ்வரசனுடைய புதிய ராஜீய நோக்கங்களும், அவனால் துரைத்தனத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களும் அவனுக்குப் பின் நிலை நின்றதாகத் தோன்றவில்லை. அசோகனுடைய சந்ததியார் அவனுடைய உற்சாகத்தையும் உயர்நோக்கங்களையும் உரிமையாகக் கொள்ளவில்லை. ஆயினும் அசோகனின் அரசாட்சி எக்காலமும் உலகசரித்திரத்தில் முக்கிய இலக்கியமாயிருக்கும் என்பது தெளிவு.

அசோகக் கல்வெட்டுகள் அகப்படும் இடங்களை 
அசோக
ஏகாதிபத்தியத்
தின் விரிவு

ஆதாரமாக வைத்துக்கொண்டு அசோகனுடைய ஏகாதிபத்தியத்தின் விரிவை நாம் ஏறக்குறையத் தீர்மானிக்கலாம். மேலும், சந்திரகுப்தனுடையகாலத்தில் ஏகாதிபத்தியம் அடைந்திருந்த விரிவிலிருந்து அசோகன்