பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

57

காலத்தில் ஏகாதிபத்தியத்தின் விரிவு குறைவுபடவில்லை. பர்மாவைத் தவிர்த்துள்ள இந்திய ராஜ்யத்தைவிட அசோகன்ராஜ்யம் அதிக விரிவாயிருந்தது. அதில் தென் கோடியிலுள்ள தமிழ்நாட்டு மூவேந்தரும் அங்குள்ள வேறு அரசரும் உட்படவில்லை ; ஆயினும் தற்காலத்தில் இந்தியாவுக்குப் புறமாயிருக்கும் பலூச்சிஸ்தானம், அப்கானிஸ்தானம் அதற்கு அப்பாலுள்ள ஹிந்துக்குஷ் மலைத்தொடர்வரையுமுள்ள பிரதேசம் இவை அசோகன் ஸாம்ராஜ்யத்தில் அகப்பட்டிருந்தன. வடக்கே காச்மீரமும் நேப்பாளமும் கிழக்கே அஸ்ஸாம் வரையுமுள்ள நாடுகளும், தெற்கே மைசூர் வரையுமுள்ள தக்கணமும் அந்த ஸாம்ராஜ்யத்தில் அடங்கியிருந்தன. ராஷ்டிரிகர், பிதேனிகர், புலிந்தர், ஆந்த்ரர் முதலிய ஜனங்கள் அசோகனுடைய ஆதிபத்தியத்துக்கு உட்பட்டவர்களாயிருந்தாலும் அவர்கள் அதிக சுதந்திரத்தைப் பெற்றிருந்தனர். இந்தியாவின் புறமே மத்திய ஆசியாவிலுள்ள கோபிப்பாலை வனப்பிரதேசத்துள்ள கோட்டான் அல்லது சீன துர்க்கிஸ்தானம் அக்காலத்தில் வளமும் நாகரிகமும் தழைத்த தேசமாயிருந்தது. இப்பிரதேசம் அசோகன் ஆளுகைக்கு உட்பட்டிருக்கவில்லையாயினும் எக்காரணத்தாலோ அசோகனுடைய செல்வாக்கு அங்கு அதிக வலிமையுடைய தாயிருந்தது. அதற்கு அசோகனுடைய தர்மப் பிரசாரம் அல்லாமல் வேறு காரணங்களும் இருக்கலாம். வியாபாரப் போக்குவரவு முற்காலங்களிலேயே ஏற்பட்டிருந்தது. அசோகன் காலமுதல், கல்வி கேள்விகள் விஷயமாகவும் அதிகமான போக்குவரவு ஏற்பட்டன. அசோகன் மகனான குனாலன் கோட்டான் ஜனங்களால் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டானென்றும் பௌத்த மதம் அவன் மூலமாக அப்பக்கங்களில் பரந்ததென்றும்