பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அசோகனுடைய சாஸனங்கள்

புத்தருக்கு அவருடைய முன் ஜன்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கூறும் கதைகளென்று பௌத்தர்களால் கருதப்படுகின்றன. அவைகளிற் பல குரங்கு, யானை, முதலை, மான், காகம், கோழி முதலிய பிராணிகளைப் பற்றிய ஈஸாப்பின் கதைகள் போன்றவை. பர்ஹுத் ஸ்தூபத்தின் வேலிக்கற்களிலுள்ள சிற்பங்கள் பல ஜாதகக் கதைகளையும் புத்தரின் வாழ்நாட்களில் நடந்த சம்பவங்களையும் விளக்கச் செதுக்கப்பட்ட சித்திரங்களாம். அச் சிற்பங்களின் கீழ், “மிகஜாதகம்”, “நாக(யானை)ஜாதகம்,” “ஷட்தந்தி ஜாதகம்” “ஹம்ஸ ஜாதகம்,” “கின்னர ஜாதகம,” “குக்குட ஜாதகம்,” “மகாதேவ ஜாதகம்,” “ஜனகராஜ ஜாதகம்” என்று சிற்பத்தின் விஷயம் கல்லில் வெட்டப்பட்டிருக்கின்றது. இக் கல்வெட்டுகள் இந்தியாவின் வேறு பல பாகங்களிற் காணப்பட்ட சித்திரங்களின் கருத்தை விளக்க மிகவும் உபயோகப்பட்டன.

காசியின் அருகில் உள்ள ஸார்நாதத்தில் 1905 
ஸார்நாத்
ஸ்தூபம்

வருஷத்தில் புராதன வஸ்து ஆராய்ச்சி தொடங்கியபோது அங்குப் புதைந்து கிடந்த ஸ்தூபம் தெரியவந்தது. அந்த ஸ்தூபம் ஸாஞ்சி ஸ்தூபத்தை விடப் பெரியது; செங்கல்லினாற் கட்டப்பட்டது.

புத்த கயையில் அசோகனால் கட்டப்பட்ட ஸ்தூபம் 
கயை ஸ்தூபம்

பல நாள் வரையில் இருந்தது. அந்த ஸ்தூபத்தின் புறவேலியிலுள்ள கற்கள் மட்டும் இப்போது அங்குக் காணப்படுகின்றன. அசோகனுடைய கட்டிடங்களின் அவசிஷ்டங்களுடன் அதற்குப் பிற்காலத்து வேலைப்பாட்டின் பாகங்களும் கலந்து கிடக்கின்றன.

அசோகன் காலத்திற் புத்தருக்கு விக்ரகங்கள்