அக்காலத்துப் பழம்பொருள்கள்
63
கிடையா.ஆனால் புத்தருடையவும் அவருடைய தர்மத்
ஸ்தூபங்களில்
உண்டான
மாறுதல்கள்
தினுடையவும், அறிகுறியாகச் சில
அடையாளங்கள் இருந்தன. தொண்டர் இந்த அடையாளங்களை வணங்கி வந்தனர். அவற்றில் முக்கியமானது போதி விருக்ஷம். மிருகங்களாலும் மனிதர்களாலும் தெய்வங்களாலும் விருக்ஷங்கள் வணங்கப்படுவதை ஸாஞ்சி, பர்ஹுத் இங்குள்ள சிற்பங்களில் நாம் மிகுதியாய்ப் பார்க்கலாம். சக்கரங்களும் வெகுவாக கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை புத்தர் தர்மத்தை உலகத்திற்குப் போதிக்கத் தொடங்கியதின் அறிகுறி. இரண்டு காலடியிணைகள் சித்திரிக்கப்பட்டு அவற்றைச் சுற்றி நிற்கும் பலர் இவற்றைப் போற்றி வணங்கும் சிற்பத்தையும் சில இடங்களிற் காணலாம். இதுவும் புத்தரின் சின்னமே. மஹாயான பௌத்தமதம் இந்தியாவிற் பிரபலமானதும் ஸ்தூபங்கள் புத்தரின் கோயில்களாய் மாறின. புத்தருக்குப் பலவிதப் பிரதிமைகள் ஏற்பட்டன. ஸ்தூபத்தின் புறக்கல்லின் நடுவில் புத்தருடைய உருவம் செதுக்கப்பட்டு நமது இந்துக் கோயில்களில் நடப்பதுபோல அதன் முன் பூஜை அபிஷேகம் தூபதீபங்கள் முதலிய சடங்குகளும் நடக்கத் தொடங்கின. ஸ்தூபத்தையே மற்றொரு பெரிய அறையின் ஓரத்தில் கட்டி முழுவதும் ஒரு பௌத்தக் கோயிலாய் மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட கோயில்களே சைத்தியம் அல்லது பள்ளி எனப்படும்.
அசோகனால் குடையப்பட்ட குகைகளைப்பற்றி
குகைகள்
அதிகமாய்ச் சொல்லவேண்டியதில்லை. மிக உறுதியான கருங்கல்லில் பல துறவிகள் சேர்ந்து வாசம் செய்யும்படி விசாலமான அறைகள் மலையோரங்களில் குடையப்பட்டிருக்கின்