பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்காலத்துப் பழம்பொருள்கள்

67

கின்றது ; ஆயினும் ஸ்தம்பத்தின் அழகு கெடவில்லை. பக்ஹிரா ஸ்தம்பம் இதைவிடப் பெரிதாயினும் வேலைப் பாட்டில் இதுவே சிறந்தது. இதன் உயரம் 40 அடி. சிகரம் மட்டும் சுமார் 7 அடி. மத்திய பாகம் உருக்கோ வெண்கலமோ என்று மயங்கும்படி இழைக்கப்பட்டிருக்கிறது, சிகரத்தின் மேலுள்ள தட்டு வட்டவடிவம். அதன் விளிம்பில் அன்னங்கள் தம் இரையைக் கொத்தித் தின்னுவதைக் காட்டும் சித்திரம் வெகு அழகாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பம் சன்னார் மலையிலுள்ள கருங்கல்லினால் ஆக்கப்பட்டது அங்கிருந்து எப்படி இதை வெட்டி வேறாக்கினார்கள் ? எந்தக் கல் தச்சர் இதைச் செதுக்கி இழைத்தனர்? எந்தச் சிற்பிகள் இதன் சிகரத்தைச் சித்திரித்தனர் ? இக் கேள்விகளுக்குச் சரியான விடை நாம் இங்குச் சொல்ல முடியாது. ஆனால் இப்பணிசெய்தோர் யாவருக்கும் கைமுடுகு உரியதென்று நாம் சொல்லலாம்.

ஸமீபத்திற் கிடைத்துள்ள ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரம் மிகவும் சிரேஷ்டமான வேலைப்பாடு அமைந்தது. அதன் படத்தை 70-ம் பக்கத்தில் காணலாம். ஸ்தம் த்தின் மகுடம் நான்கு சிங்கங்கள் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு தர்ம சக்கரத்தைத் தமது முதுகில் சுமந்து கொண்டிருப்பதுபோல் உள்ளது. சிங்கங்கள் ஜீவனுள்ளன போலவும் மிகக் கம்பீரமாகவும் இருக்கின்றன.

அசோகன் காலத்துச் சிற்பங்களின் குணாகுணங்களை 
இந்தச் சிற்பத்
தைப் பற்றிய
மதிப்பு

வித்வான்கள் பல்விதமாக நிதானிக்கிறார்கள். பெர்ஸியா தேசத்து அரசர்களும் தம் நாட்டில் ஸ்தம்பங்களை நாட்டினர். அவற்றை அசோகனுடைய ஸ்தம்பங்களுக்குப் பலவிதத்திலும் ஒப்பிடலாம்.