பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோக எழுத்து

69

நாம் முதலாவதாக இந்தியாவின் சிற்பத்தை நோக்கும் போது அது குழந்தைப் பருவத்ததாயிராமல் ஆரம்பத்திலேயே பூர்ண யௌவனத்துடன் காணப்படுகிறது. இதிலிருந்து நம் நாட்டில் சிற்பத்தின் அபிவிர்த்தி வெகு காலத்துக்கு முன்னமே தொடங்கிவிட்டதென்றும் அசோகன் காலத்துக்குமுன் மரவேலையில் அடைந்த திறமை, கடைசியாகக் கல்வேலைக்கு உபயோகப்படுத்தப்பட்டதென்றும், இப்படிப்பட்ட சாதனத்தின் வேறுபாட்டினால் சிற்பத்தின் மேன்மை அதிகக் குறைவுபடவில்லை யென்றும் இந்திய சிற்ப அபிமானிகள் கூறுகின்றனர்.

VI. அசோக எழுத்து

அசோகன் காலத்தில் உபயோகிக்கப்பட்ட லிபி 
இருவித புராதன
லிபிகள்

இருவகைப்படும். (i) பெரும்பாலான இந்திய பாஷைகளைப்போல் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு எழுதப்படும் ப்ராம்மி லிபி. (ii) மற்றொன்று ஹிந்துஸ்தானியைப்போல வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கு எழுதப்படும் கரோஷ்டி லிபி. ப்ராம்மி லிபியை இந்தியாவிலுள்ள எழுத்துக்களுக்கெல்லாம் தாய் என்று சொல்லலாம். பெரும்பாலான அசோக சாஸனங்கள் இந்த லிபியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அசோக சாஸனங்களிற் காணப்படும் இவ்விருவகை லிபிகளை விடப் புராதனமான லிபிகள் இந்தியாவில் இல்லையென்று சொல்லலாம்.

இந்தியாவிலுள்ள பாஷைகளுக்கு வெவ்வேறு லிபி தற்காலத்தில் ஏற்பட்டிருந்தாலும் இந்த லிபிகள் அசோக சாஸனங்களிலுள்ள ப்ராம்மி லிபியிலிருந்து