பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

75

சொல்லி விளங்க வைத்தலுக்கும் இந்த லிகிதங்களுக்கும் வெகு தூரமுண்டு. ஆயினும் அசோகன், விஷயத்தினுடைய தேன் போன்ற மாதுரியத்தாலேயே இவ்விதம் விவரிக்கவும் திருப்பிச் சொல்லவும் தூண்டப்பட்டதாகச் சொல்வது நாமும் ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஸமரஸ பாவத்தைப்பற்றிய பன்னிரண்டாம் சாஸனம், தர்மத்தின் வெற்றியைப் பற்றிய பதின்மூன்றாம் சாஸனம், அரசன் நற்செய்கைகள் பலவற்றை எடுத்துக் கூறும் ஏழாம் ஸ்தம்ப சாஸனம், இவற்றை நாம் வாசிக்கும் போது அரசனுடைய உயர் நோக்கங்களையே நாம் குறிப்பிடுகிறோம். இவைகளின் ஏற்றமானது வாசகரீதியின் குற்றங்களை மறக்கச் செய்கின்றது.

அசோகனால் எழுதப்பட்டவை யெல்லாம் சாஸனங்கள் அல்ல. 
சாஸனங்கள்
அல்லாத லிகிதங்
கள்

உதாரணமாக, ரும்மின் தேயீயிலுள்ள கல்வெட்டுக்களும் குகைகளிலுள்ள கல்வெட்டுக்களும் சாஸனங்கள். என்ற பெயருக்கு உரியவையல்ல; அவற்றை லிகிதங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும்.

அசோக லிகிதங்கள் எல்லா வகையும் எல்லாப் பிரதிகளும் 
லிகிதங்களின்
பிரிவு

சேர்ந்து 140 என்று கணக்கிடலாம். ஒவ்வொரு லிகிதத்துக்குமுள்ள பல பிரதிகளை வெவ்வேறாக எண்ணினால் இக்கணக்கு ஏற்படுகிறது. பிரத்தியேகமான தஸ்தாவேஜுகள் முப்பத்து மூன்று; அவற்றை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கலாம்: