பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்

77


VII. ஸ்மாரக லிகிதங்கள்.  2
ரும்மின்தேயீயிலும் நிக்லீவாவிலும் அசோக
னது தீர்த்தயாத்திரையின் ஞாபகக்குறிப்பாக
எழுதப்பட்டவை.
VIII.. ராணி காருவாகியின் லிகிதம்.  1
இங்கு அசோகன் ராணி காருவாகி, தனது
தானங்களை விசேஷமாய்க் கவனிக்க
வேண்டு மென்கிறாள்.
IX. தானப்பிரமாண லிகிதங்கள்.  3
இவை ஆஜீவகர் வாசம் செய்வதற்கு என்று
குடையப்பட்ட குகைகளில் உள்ளவை.

மொத்தம் ...
 33

இந்த லிகிதங்கள் தற்காலம் எவ்வளவு தூரம் கேடில்லாமல் இருக்கின்றன என்றும், எவ்விடங்களில் காணப்படுகின்றன என்றும், அவற்றின் காலம் இன்னதென்றும் காட்டும் குறிப்புக்கள் அந்தந்த லிகிதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புடன் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பதத்திற்கு மூலத்தில் உள்ள சொல் இன்னதென்று அந்த லிகிதத்தின் முடிவில் வரும் குறிப்புக்களில் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் மூலத்தில் வரும் சொல்லையே பெயர்ப்பிலும் எழுதி அதன் கருத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள் கீழுள்ள குறிப்புக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. சாஸனங்களுடைய பிரதிகள் யாவும் ஒன்று போல் இருக்க மாட்டா. பாஷை மட்டுமன்று, வேறு வித்தியாசங்களும் காணப்படும். இம்மொழி பெயர்ப்பில் அவ்வித்தியாசங்களை நாம் அதிகமாகப் பொருட்படுத்த வில்லை, ஸார்நாத் சாஸனத்திலும் வேறு சில லிகிதங்களிலும் சில வரிகள் அழிந்திருக்கின்றன ; அந்த வரிகளிலுள்ள சொற்கள் இன்னவை யென்று வித்வான்கள் அனுமானித்திருக்கின்றனர். இவையன்றி சாஸனங்களின் கருத்தை விளக்க உபயோகமென்று