பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

78

நினைத்துச் சில சொற்கள் மூலத்தில் இல்லாவிடினும் மொழி பெயர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இவை ( ) இவ் வடையாளத்துக்குள் அடக்கப்பட்டிருக்கின்றன.

அசோகன் காலத்திலிருந்த இந்துஸ்தானத்து ஜனங்கள் தங்கள் 
அசோக
லிகிதங்களின்
பாஷை

வீட்டிலும் ராஜ்யகாரியங்களிலும் உபயோகித்துவந்த பாஷையை நாம் அசோகனுடைய சாஸனங்களிலும் பார்க்கிறோம். தற்காலத்தில் ஹிந்துஸ்தானத்திற் பேசப்படும் பாஷைகள் இந்தச் சாஸனங்களின் பாஷையிலிருந்து உண்டானவையே. அசோக சாஸனங்களின் பாஷையை ஒருமையில் குறிப்பிடுவதா பன்மையில் குறிப்பிடுவதா என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதன்று. சாஸனங்களின் மொழி, இடத்துக்கிடம் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கிறது. இப்படி வித்தியாசப்பட்ட மொழிகள் மூன்று வகைப்படுமென்று சொல்லலாம். அவையாவன: கிர்நார் சாஸனத்தில் காணப்படும் மேற்குமொழி; தவுளியில் காணப்படும் கிழக்கு மொழி; ஷாபாஸ்கர்ஹியில் காணப்படும் வடமேற்கு மொழி. அக்காலத்திலேயே சம்ஸ்கிருதம் பேச்சுவழக்கில் இல்லாமல் இதிகாஸம், காவியம், நாடகம், வியாகரணம் முதலிய விஷயங்களைத் தெரிவிப்பதற்கும் நூல்கள் இயற்றுவதற்கும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. பேச்சுவழக்கிலுள்ள மொழிகளைப் பிராகிருதம் என்று நாம் சொல்லுவோம். பௌத்தமதம் பிரபலமான போது புத்தரின் வாக்கியங்களையும் கொள்கைகளையும் பிரதிபாதிப்பதற்கு அவர் சீஷர் ஸம்ஸ்கிருதத்தை உபயோகிக்கவில்லை. பாமரஜனங்கள் புத்தரின் உபதேசங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் கோசலதேசத்தில் அப்போது பேசப்பட்டுவந்த பிரா-